யூடியூபர் இர்ஃபான் புகழ்ந்த ஹோட்டலுக்கு பூட்டு; எல்லாமே கெட்டுப்போனதாம்

பிரபல யூடுயூப் உணவு விமர்சகர் இர்ஃபான் ரிவ்யு செய்த ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரங்கள் சீல் வைத்து உள்ளனர். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 7, 2022, 06:25 AM IST
  • சென்னை அண்ணா நகரில் உள்ள ரோஸ் வாட்டர் ஹோட்டல்
  • உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
யூடியூபர் இர்ஃபான் புகழ்ந்த ஹோட்டலுக்கு பூட்டு; எல்லாமே கெட்டுப்போனதாம் title=

சென்னை அண்ணா நகரில் உள்ள ரோஸ் வாட்டர் என்ற உணவகத்தில் இறால் வகை உணவுகள் கெட்டுப்போனதாக வந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த உணவகத்தில், உணவு தயாரிப்புக் கூடம், இறைச்சி பதப்படுத்தும் இயந்திரங்கள் உள்ளிட்டவை போதிய பராமரிப்பின்றி இருந்ததை கண்டறிந்த அதிகாரிகள், அதனை புதுப்பிக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ரெய்டு இல் மொத்தம் 10 கிலோ இறால், 45 கிலோ சிக்கன், மட்டன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அத்துடன் உணவகத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அஜித் -61 டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி! வெளியானது புதிய தகவல்!

அத்துடம் இந்த ஆய்வு முடியும் வரை ஹோட்டலை நடத்தக் கூடாது என்று அந்த உணவகத்தை மூடி அதிகாரிகள் பூட்டு போட்டு இருக்கிறார்கள்.

முன்னதாக பிரபல யூடுயூப் உணவு விமர்சகர் இர்ஃபான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு அங்கு இருந்த உணவுகள் அனைத்தும் தரமாக இருப்பதாக கூறியிருந்தார். அதிகநபடி தற்போது அந்த ஹோட்டல் குறித்து இர்ஃபான் வெளியிட்ட ரிவ்யு வீடியோவை மக்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பரிமாறப்பட்ட இறால் வகை உணவுகள் கெட்டுப் போய் இருந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டனர். 

அதன் பேரில் உணவுகள் சுகாதாரமற்ற முறையில் பராமரிப்பின்றி இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் அங்கு இருந்த ஹோட்டல் ஊழியர்களை லெப்ட் ரைட் வாங்கியதோடு இதையெல்லாம் நீங்கள் சாப்பிடுவீர்களா என்று கேள்வியையும் எழுப்பினார்கள். தற்போது புதுப்பித்தப்பிறகு மீண்டும் ஆய்வு நடந்த பின்னரே அந்த உணவகம் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க | தளபதி - சூப்பர் ஸ்டாருக்கு கதை சொல்லியிருக்கும் ஹரி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News