Bigg Boss 4 Balaji Murugadoss உடனான தன் நட்பைப் பற்றி மனம் திறந்தார் Yashika Aannand

2017 ஆம் ஆண்டில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அவர்களது படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2020, 08:00 PM IST
  • பாலாஜி முருகதாஸ் பற்றி மனம் திறந்தார் யாஷிகா ஆனந்த்.
  • யாஷிகா ஆனந்த் Bigg Boss-2 நிகழ்சியின் பிரபலமான போட்டியாளர்.
  • பாலாஜியுடனான தன் நட்பைப் பற்றி தெளிவுபடுத்தினார் யாஷிகா.
Bigg Boss 4 Balaji Murugadoss உடனான தன் நட்பைப் பற்றி மனம் திறந்தார் Yashika Aannand title=

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'Bigg Boss 4’ நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல ஆதரவைப் பெற்றுள்ளது. இதில் மிகவும் உறுதியான போட்டியாளர்களில் ஒருவராக கருதப்படும் பாலாஜி முருகதாஸ், பல வித யுக்திகளை பயன்படுத்தி இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்.

ஷிவானி நாராயணனுடனான அவரது நட்பானாலும் சரி, சனம் ஷெட்டியுடனான அவரது சண்டைகளானாலும் சரி, அவர் எப்போதும் பிக் பாஸ் வீட்டின் சர்ச்சை நாயகனாக இருந்து வருகிறார்.

பாலாஜி முருகதாஸ் (Balaji Murugadoss) முன்னொரு காலத்தில், 'இருட்டு அறையில் முரட்டு குத்து' பட நாயகியும் 'Bigg Boss-2' புகழ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்தின் நெருங்கிய தோழராக இருந்தார் என்பதை நெட்டிசன்கள் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர். 2017 ஆம் ஆண்டில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அவர்களது படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

No description available.

2019 ஆம் ஆண்டில் நள்ளிரவு குடிபோதையில் வாகனம் ஓட்டி உணவு விநியோகிக்கும் நபர் ஒருவரை இடித்த வழக்கில் யாஷிகா ஆனந்துக்கு (Yashika Aannand) தொடர்பு இருந்தது என்று கூறப்பட்டது. ஆனால், தான் அந்த குற்றத்தை செய்யவில்லை என்றும், காரை ஓட்டிய நபருக்கு உதவ தான் அங்கு வந்ததாகவும், அப்பொது அங்கிருந்த மக்கள் தான் அதில் ஈடுபட்டுள்ளதாக தவறாகப் புரிந்துகொண்டதாகவும் பின்னர் யாஷிகா தெளிவுபடுத்தினார்.

ALSO READ: செம்பருத்தி தொடரில் இனி கார்த்திக்கு பதில் இவரே! ரசிகர்கள் அதிர்ச்சி!

அதிவேகமாக காரை ஓட்டிச் சென்ற நபர் பாலாஜி முருகதாஸ் என்பதும் அவரும் யஷிகாவும் ஒரே விருந்தில் கலந்துகொண்டதாகவும், பின்னர் வெவ்வேறு கார்களில் சென்றதாகவும் பிறகு தெரியவந்தது.

இப்போது ஒரு சமூக ஊடக (Social Media) உரையாடலில் ஒரு ரசிகர் யாஷிகாவிடம் "Bigg Boss 4-ல் இருக்கும் பாலாஜி முருகதாஸ் உங்கள் நண்பரா? ஆனால் நீங்கள் இருவரும் இன்ஸ்டாவில் கூட ஒருவரையொருவர் ஃபாலோ செய்யவில்லையே?" என்று கேட்டார். அதற்கு யாஷிகா, "நாங்கள் முன்பு நல்ல நண்பர்களாக இருந்தோம். ஆனால் நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது அவருக்கு நல்ல புகழ் கிடைத்துள்ளது. இந்த நாளுக்காக அவர் பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்” என்று பதிலளித்துள்ளார்.

தானும் பாலாஜியும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தோம், அதாவது தற்போது அப்படி இல்லை என்று யாஷிகா தெளிவுபடுத்தி விட்டார்.

யாஷிகா இப்போது 'இவன் தான் உத்தம்மன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது சக 'Bigg Boss Housemate’ மகத் ராகவேந்திரா (Mahat Raghavendra) ஹீரோவாக நடித்துள்ளார்.

ALSO READ: ஒரு மாதம் கழித்து இலங்கை வந்த Losliya தந்தையின் சடலம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News