KGF 3 எப்போது கேள்விக்கு விடையளித்து எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ராக்கி யஷ்

KGF 3 திரைப்படம் தொடர்பான சுவாரஸ்யமான விவரங்களைப் பகிர்ந்துள்ளார் KGF 2 நட்சத்திரம் யஷ். அவர் சொல்வதைக் கேட்டால் மூன்றாம் பாகம் எப்போது வரும் என்ற ஆவல் அதிகரிக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 27, 2022, 01:50 PM IST
  • கேஜிஎஃப் 3 ரிலீஸ் எப்போது
  • ஆவலை அதிகரித்த இரண்டாம் பாகம்
  • மூன்றாம் பாகத்துக்கான ஆவலை அதிகரிக்கும் செய்தியை பகிர்ந்த யஷ்
KGF 3 எப்போது கேள்விக்கு விடையளித்து எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ராக்கி யஷ் title=

யஷ் பிரம்மாண்டமாக கலக்கிய KGF திரைப்படத்தின் முதல் இரு பாகங்களும் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இப்போது KGF 3 எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மூன்றாம் பாகம் தொடர்பாக நாயகன் யஷ் அண்மையில் கூறிய செய்திகள் ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.  

KGF 2 மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம், பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது. எந்தவித சிரமமுமின்றி இதுவரை இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக கேஜிஎஃப் இரண்டாம் பாகம் சாதனையை படைத்துள்ளது.

திரைப்படத்தின் கடைசிக் காட்சியில், KGF அத்தியாயம் 3 பற்றி சூசகமான விஷயம் ரசிகர்களின் ஆவலை அதிகரித்ஹ்டுள்ளது. அப்போதிருந்து, யஷ் கலக்கவிருக்கும் மூன்றாம் பாகத்தின் அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் படிக்க | KGF-2 இனி ஹவுஸ்ஃபுல் ஆவது கஷ்டம்

கேஜிஎஃப் 3 திரைப்படம் தொடர்பான திட்டங்கள் தற்போது ஆலோசிக்கப்பட்டு வந்தாலும், யஷ் இந்த திரைபப்டம் பற்றி என்ன சொல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றும் வகையில் நடிகர் யஷ், கேஜிஎஃப்பின் மூன்றாம் பாகம் குறித்து இயக்குனரிடம் பேசியதாகவும், அது நிறைவேறுவதற்கான நிறைய சாத்தியங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"ஏற்கனவே நானும், பிரசாந்தும் நிறைய காட்சிகளைப் பற்றி யோசித்துள்ளோம். 'அத்தியாயம் 2'ல் எங்களால் செய்ய முடியாத விஷயங்கள் நிறைய உள்ளன. எனவே மூன்றாம் பாகம் எடுப்பதற்கான நிறைய சாத்தியங்கள் இருப்பதும் உண்மை தான். இருந்தாலும், கதையை நாங்கள் மேலும் சொல்ல முடியாமல் அதை அங்கேயே விட்டுவிட்டோம். முன்னதாக, பிரசாந்த் நீல் இதைப் பற்றி பேசியுள்ளார், மேலும் கேஜிஎஃப் 3 திரைப்படம் எடுப்பது தொடர்பாக விரைவில் முடிவு செய்யலாம் என்றும் பிரசாந்த் நீல் கூறினார். சினிமாவில் இறந்தவர்களைக்கூட உயிர்ப்பிக்க முடியும். மக்கள் கேஜிஎஃப்: அத்தியாயம் 2 ஐ விரும்பினால், அடுத்தப் பாகத்தை தொடரலாம் என்று பேசினோம். இப்போது கேஜிஎஃப் 2, எதிர்பார்த்த அளவு வெற்றி பெற்றதால், கேஜிஎஃப் 3 ஐ நிச்சயமாக எதிர்பார்க்கலாம்” என்று நாயகன் யஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கொரோனாவுக்கு பிறகு அதிக வருமானம் குவித்து சர்வதேச சாதனை செய்த Monster KGF 2

இதற்கிடையில், கேஜிஎஃப் 2 பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்து பல வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது. பிராந்திய மொழிகள் மட்டுமின்றி, இந்தியிலும் இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது.

ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான இப்படம் இன்னும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளிநாடுகளில் கூட, யஷின் கேஜிஎஃப் 2 மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

kgf

தற்போது மூன்றாம் அத்தியாயமும் வரும் என்ற குறிப்பு அனைவரின் எதிர்பார்ப்புகளையும் எகிற வைத்துள்ளது. 

கேஜிஎஃப் மூன்றாம் பாகத்தில் யஷ் தவிர, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் இருவரும் இருப்பார்கள் என்பது இரண்டாம் பாகத்திலேயே தெரிகிறது. கேஜிஎஃப் மூன்றாம் பாகத்தில் யஷ்ஷுக்கு நாயகியாக நடிக்கவிருக்கும் கதாநாயகி யார் என்பது ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

இதுவரை, பிரசாந்த் நீல் மற்றும் கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனம் மூன்றாம் அத்தியாய தயாரிப்பு பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும்  கேஜிஎஃப் அத்தியாயம் 3 தயாரிப்பு எப்போது என்பதை தயாரிப்பாளர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்பதை தற்போது யஷ் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | விஜய்யின் டாப்-10 வசூல் படங்கள் இவைதான்!- ‘அந்த’ப் படம் இத்தனை கோடி வசூலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News