Yaadhum Oore Yaavarum Kelir: விஜய்சேதுபதி பட இயக்குனர் அதிர்ச்சி தகவல் வெளியீடு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தின் டீஸர் நேற்று முன்தினம் வெளியானது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 6, 2021, 01:22 PM IST
Yaadhum Oore Yaavarum Kelir: விஜய்சேதுபதி பட இயக்குனர் அதிர்ச்சி தகவல் வெளியீடு! title=

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தின் டீஸர் நேற்று முன்தினம் வெளியானது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi), மேகா ஆகாஷ் (Megha Akash) நடித்த இந்த படத்தை இயக்கிய வெங்கட கிருஷ்ண ரோக்நாத் தனக்கு தெரியாமலேயே இந்த டீசர் வெளிவந்து விட்டது என்றும் இதுகுறித்து தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்டு உள்ளேன் என்று தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ALSO READ | நயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்துவிடுவார்கள் - பிரபல நடிகர் பகீர்!

மன்னிக்கவும்... இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த யாதும்ஊரே யாவரும்கேளிர் படம் பற்றிய அத்தனை அப்டேட்சையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன். இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது. கூடவே மிக முக்கியாமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன்.

திரும்பவும் மன்னிக்கவும் நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது. தயாரிப்பு தரப்போடு இந்த குளருபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்.

இவ்வாறு இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோக்நாத் தெரிவித்துள்ளார்.

ALSO READ | விஜயின் மாஸ்டர் படத்தின் டெலிடட் காட்சிகளுக்கு அதிரடியான வரவேற்பு!

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News