அரவிந்த் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா 25 வருடங்களாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும் அஜித் படங்களில் இவரது இசை தனித்துவமாக இருந்து வருகிறது. அஜித்தின் 8 படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் அனைத்து படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
ALSO READ | ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது கூழாங்கல்
பாடல்களை தாண்டி அஜித் - யுவன் காம்போ என்றாலே ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது தீம் மியூசிக் தான். தீனா படத்தில் அஜித்திற்கு யுவன் கம்போஸ் செய்த தீம் அந்த சமயத்தில் அதிகஅளவில் பேசப்பட்ட, கேட்கப்பட்ட தீம் ஆகா அமைந்தது. அதன்பிறகு பில்லாவில் யுவன் போட்ட தீம் மியூசிக் வேர லெவல் ஹிட் அடித்தது. தீம் என்றாலே பில்லா தான் என்று சொல்லும் அளவிற்கு அனைவராலும் பேசபட்டது. அதன்பின் ஏகன், அசல் படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும் பாடங்கள் அனைவரது மத்தியிலும் சென்றடைந்தது.
2011ம் ஆண்டு வெளிவந்த அஜித்தின் 50வது படமான மங்காத்தாவில் யுவனின் தீம், அந்த படத்தையே வேற ஒரு தரத்திற்கு எடுத்து சென்றது. அஜித் ரசிகர்கள் மட்டும் இன்றி மற்ற ஹீரோ ரசிகர்களும் ரிங்டோன் ஆகா வைக்கும் அளவிற்கு சிறப்பாக அமைந்தது மங்காத்தா தீம். பில்லா 2, ஆரம்பம் படங்களுக்கு பிறகு அஜித் - யுவன் கூட்டணி சேராமலே இருந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு நேர்கொண்ட பார்வை படத்தில் மீண்டும் இரண்டு பேரும் இணைந்து பணியாற்றினர்.
அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள வலிமை படத்தில் இருந்து வெளிவந்துள்ள 2 பாடல்களுமே ஹிட் அடித்துள்ளன. இன்று வலிமை படத்தில் இருந்து தீம் மியூசிக் வெளிவரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார். அஜித் படங்களுக்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவேன் என்று சமீபத்திய நேர்காணலில் யுவன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சிம்புவின் மாநாடு படம்; ரசிகர்கள் ஆரவாரம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR