Watcho App: கொரிய தொடர்கள் பிடிக்குமா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!!

Watcho App: வேகமாக வளர்ந்து வரும் ஓடிடி இயங்குதளங்களில் ஒன்றான வாட்சோ ஆப் பயனர்களுக்கு புதிய மற்றும் சுவாரசியமான அனுபவத்தை வழங்குகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2022, 06:40 PM IST
  • வாட்ச்சோவில் கொரியன் தொடர்கள்.
  • வாட்சோ ஆப் பயனர்களுக்கு புதிய மற்றும் சுவாரசியமான அனுபவத்தை வழங்குகிறது.
  • WATCHO தனது கொரிய கண்டெண்ட் லைப்ரரியில் இருந்து ஒவ்வொரு நாளும் 3 மணிநேர கொரிய உள்ளடக்கத்தை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறது.
Watcho App: கொரிய தொடர்கள் பிடிக்குமா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!! title=

வாட்ச்சோவில் கொரியன் தொடர்கள்: வேகமாக வளர்ந்து வரும் ஓடிடி இயங்குதளங்களில் ஒன்றான வாட்சோ ஆப் பயனர்களுக்கு புதிய மற்றும் சுவாரசியமான அனுபவத்தை வழங்குகிறது. நீங்கள் கொரிய தொடர்களை விரும்புபவராக இருந்தால், இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட கொரிய நாடகங்களை வாட்சோவில் பார்க்கலாம். '#RozanaKDrama' இன் ஒரு பகுதியாக, WATCHO தனது கொரிய கண்டெண்ட் லைப்ரரியில் இருந்து ஒவ்வொரு நாளும் 3 மணிநேர கொரிய உள்ளடக்கத்தை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறது.

டிராமா, ஆக்‌ஷன், ரொமான்ஸ் முதல் அறிவியல் கதைகள் வரை தனது பார்வையாளர்களை மகிழ்விக்க தயாராக உள்ளதாக செயலி உறுதியளிக்கிறது. இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட கொரிய நிகழ்ச்சிகளை வழங்குவதன் மூலம் வாட்சோ, சர்வதேச உள்ளடக்கத்தை இந்திய பார்வையாளர்களுக்கு பெருமளவில் கொண்டு வருகிறது. மொத்தம் 650+ மணிநேர கொரிய உள்ளடக்கம் தொடர்ச்சியாக வெளியிடப்படும். இதில் ஒவ்வொரு நாளும் புதிய எபிசோடுகள் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

மேலும் படிக்க | Netflix Password ஷேர் செய்யறீங்களா? இனி அப்படி செய்தால் தனி கட்டணம்! 

இந்த நிகழ்ச்சியின் பரபரப்பான வரிசையானது பல்வேறு வகைகளை உள்ளடக்கியது. காதல், கார்ப்பரேட் சதி, குடும்ப நாடகம், கற்பனை, சாகசம் மற்றும் அறிவியல் புனைகதை என பல்வேறு நிகழ்ச்சிகளை இதில் கண்டு களிக்கலாம். அந்த வரிசையில் முதன்மையானது 'வெல்கம் 2 லைஃப்'. சட்டத்தைப் தவறாக பயன்படுத்திக் கொள்ள முயல்பவர்களுக்கு உதவும் ஒரு சுயநல வழக்கறிஞரின் கதையைச் சொல்லும் கற்பனை நாடகமாகும் இது. ஒரு நாள், அவர் கார் விபத்துக்குள்ளாகி ஒரு இணை உலகிற்கு (பேரலல் வர்ல்ட்) செல்கிறார். அதன் பின் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள் இதில் காட்டப்பட்டுள்ளன. 

இது தவிர, இன்னும் சில முக்கியமான நாடகங்களான 1 பர்சென்ட் ஆஃப் சம்திங், எக்ஸ்ட்ரார்டினரி யூ, கெய்ரோஸ் மற்றும் ஃப்ளவர் ஆஃப் ஈவில் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

WATCHO வலைத் தொடர்கள் உட்பட பல அசல் நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது. தி மார்னிங் ஷோ, ஹேப்பி, பௌச்சர்-இ-இஷ்க், ஹேப்பி, குப்தா நிவாஸ், ஜான்பூர், பாப்பாஸ் ஸ்கூட்டர், அகாத், சீட்டர்ஸ்-தி வெகேஷன்ம் சர்ஹத், மிஸ்டரி டேட், ஜால்சாஸி, டார்க் டெச்டினேஷன், இட்ஸ் மை பிளெஷர், 4 தீவ்ஸ், லவ் கிரைஸிஸ், லுக் ஐ கேன் குக் ஆகியவற்றுடன் பிக்ரே ஹை அல்ஃபாஸ் போன்ற ஒரிஜினல் நிகழ்ச்சிகளும் இதில் உள்ளன.

இந்த செயலியில் தனித்துவமான யுஜிசி இயங்குதளமும் உள்ளது. பயனர்கள் இதில் தங்களுடைய சொந்த அசல் வீடியோக்களை உருவாக்கி, அவர்களின் கலையைக் கண்டறிந்து அதை செதுக்கிக்கொள்ள முடியும். திரையில் கிடைக்கும் (Android மற்றும் iOS சாதனங்கள், Dish SMRT சாதனங்கள், d2h மேஜிக் சாதனங்கள் மற்றும் Fire TV Stick) மற்றும் www.WATCHO.com இல், watcho தற்போது 35 அசல் நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட பிரத்யேக அரங்குகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு நேரடி சேனல்களை வழங்குகிறது. 

மேலும் படிக்க | அனுபவி கற்றோடு சிறகடி - வெளியானது நட்சத்திரம் நகர்கிறது ஃபர்ஸ்ட் சிங்கிள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News