Watch: பிக் பாஸ் வெற்றியாளர் வெளியிட்ட முதல் வீடியோ! இணையத்தில் வைரல்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 17 ஆம் தேதி முடைந்தது. இந்த இறுதிப்போட்டியில் ஆரி டைட்டில் வின்னர் ஆகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2021, 01:03 PM IST
Watch: பிக் பாஸ் வெற்றியாளர் வெளியிட்ட முதல் வீடியோ! இணையத்தில் வைரல்! title=

புது டெல்லி: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 17 ஆம் தேதி முடைந்தது. இந்த இறுதிப்போட்டியில் ஆரி டைட்டில் வின்னர் ஆகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர். இதில்,  ஆரிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டனர் என்றே சொல்லலாம். இதன் முக்கிய காரணம் அவரது நேர்மையும் மனவுறுதியும் தான். 

இப்படி பிரபலங்கள் மற்றும் வெகுஜன மக்களை கவர்ந்திழுத்த ஆரி பிக்பாஸ் (Bigg Boss Tamilநிகழ்ச்சிக்கு பிறகு எப்போது மக்களை சந்திக்க வருவார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். பலரும் அவரது பதிவுகளில் எப்பொழுது எங்களை சந்திக்கப் போகிறீர்கள் என்று கேட்டிருந்தனர். 

ALSO READ | பிக் பாஸ் சோம் சேகரின் செல்ல நாய் திடீர் மரணம்! வீடியோ!

இந்நிலையில் அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஆரி (Aari Arujunan). அதில்., "உங்களையெல்லாம் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக காத்திருந்தேன். டிக்கெட் டு பினாலே நாளிலிருந்தே எனக்கு உடல்நிலை சரியில்லை. இன்னும் சரியாகவில்லை. சீக்கிரம் உங்களை சந்திக்க வரவேண்டும். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெகுவிரைவில் உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் சொல்வேன். இது என்னுடைய வெற்றி அல்ல, நேர்மைக்கும் உண்மைக்கும் நீங்கள் கொடுத்த வெற்றி தான் என்று தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News