நீதிமன்றம் விதித்த ரூ.5 லட்சம் அபராத தொகையை கல்வி உதவிக்கு வழங்குவதாக விஷால் அறிவிப்பு!

விஷாலுக்கு வழங்குமாறு லைகா நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த 5 லட்சம் ரூபாய் அபராத தொகையை தனது அறக்கட்டளை மூலம் மாணவ, மாணவியர்களுக்கு நடிகர் விஷால் வழங்குகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2021, 05:57 PM IST
  • விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சக்ரா என்ற படம் வெளியானது.
  • சக்ரா படத்தினை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் வழக்கு கொடுத்தது
  • சக்ரா படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
நீதிமன்றம் விதித்த ரூ.5 லட்சம் அபராத தொகையை கல்வி உதவிக்கு வழங்குவதாக விஷால் அறிவிப்பு!  title=

Vishal விஷாலுக்கு வழங்குமாறு லைகா நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த 5 லட்சம் ரூபாய் அபராத தொகையை தனது அறக்கட்டளை மூலம் மாணவ, மாணவியர்களுக்கு நடிகர் விஷால் வழங்குகிறார்.

விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சக்ரா என்ற படம் வெளியானது.  இப்படம் வெளியீட்டின் போது லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தது.   நடிகர் விஷால் 2016 ம் ஆண்டு மருது திரைப்பட தயாரிப்புக்காக கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம் 21 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.  பின்பு அந்த தொகையை லைகா நிறுவனம் செலுத்தி விட்டது.  அதற்கு பதிலாக விஷால் லைகா நிறுவனத்திற்கு படம் பண்ணி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.   அதன் பின், விஷால் லைகா நிறுவனத்திற்கு படம் பண்ணி கொடுக்காத நிலையில், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விஷால் தரப்பில் பதில் வராததால் சக்ரா படத்தினை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் வழக்கு கொடுத்தது.  இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், சக்ரா படம் தொடர்பான இரண்டு வார வசூல் விவரங்கள் மற்றும் இணையத்தில் வெளியிடும் ஒப்பந்தம் ஆகியனவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. 

vishal

தற்போது , லைகா நிறுவனத்தால் விஷால் மற்றும் சக்ரா படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால்  தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்  பொய்யான வழக்கை முன்வைத்து விஷாலை துன்புறுத்தியதற்காக லைகா நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்

இந்நிலையில் இந்த தீர்ப்பில் கிடைக்கு ரூ.5 லட்சம் அபராத தொகையை மாணவ மாணவிகள் கல்வி செலவுக்கு வழங்கப் போவதாக நடிகர் விஷால் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன். தற்போது கோர்ட்டு அபராதம் விதித்துள்ள ரூ.5 லட்சம் தொகை தேவி அறக்கட்டளை மூலம் மாணவ மாணவியரின் படிப்பு செலவுக்கு முழுமையாக செலவு செய்யப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து?

விஷால் தற்போது எனிமி (Enemy) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அவன் இவன் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக ஆர்யாவுடன் இணைந்து இந்தப்படத்தில் நடித்துள்ளார். இதில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார்.  இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYe

Trending News