சினிமாவில் இருந்து விலகிய விஜய்..கண்கலங்கிய குட்டி ரசிகர்! வைரல் வீடியோ..

Vijay Quits Cinema: Fans Raction: நடிகர் விஜய், சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Written by - Yuvashree | Last Updated : Feb 3, 2024, 07:25 PM IST
  • நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுகிறார்.
  • ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  • ஒரு குட்டி ரசிகரின் வீடியோ வைரலாகி வருகிறது.
சினிமாவில் இருந்து விலகிய விஜய்..கண்கலங்கிய குட்டி ரசிகர்! வைரல் வீடியோ.. title=

ரசிகர்களால் ‘தளபதி’ என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய், திடீரென்று தான் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. 

திரையுலகில் இருந்து விலகும் விஜய்..

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் நீடித்து நிற்பவர் நடிகர் விஜய். தனது தந்தையின் படங்களில் ஹீரோவாக நடித்து அறிமுகமான இவர், இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு போட்டி நடிகராக பார்க்கப்பட்டு வந்தவர், அஜித் குமார். இந்த நிலையை கடந்து, இவரை ரஜினிக்கு போட்டியாகவே ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர். சரியான கதைகளை தேர்ந்தெடுத்து விஜய் நடிப்பதில்லை என்ற விமர்சனம் அவர் மீது எழுந்தாலும், அதை கண்டு கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளாகவே தனக்கு இருக்கும் அரசியல் ஆர்வத்தை தனது படங்கள் மற்றும் பட விழாக்களில் வெளிப்படுத்தி வந்தார். இதனால் இவரது படங்கள் தொடர்ந்து ரிலீஸ் சமயத்தில் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அவர் நேற்று (பிப்ரவரி 1) அதிகாரப்பூர்வமாகவே தான் அரசியல் கட்சி தொடங்கி விட்டதாக அறிவித்து விட்டார். மேலும், இதனால் தான் சினிமாவை விட்டு விலகுவதாகவும் தெரிவித்து உள்ளார். 

ரசிகர்கள் ஏமாற்றம்:

நடிகர் விஜய் திரையுலகை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். விஜய்க்கு GOAT அல்லது அவரது 69வது படம்தான் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் எல்.சி.யுவில் உள்ளதால் இனி அந்த யுனிவர்ஸில் வரும் படங்களில் அவர் நடிக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. லியோ 2, வெற்றி மாறனுடன் படம், ஷங்கருடன் ஒரு படம், அட்லீயுடன் ஒரு படம் என கனவு கண்டு கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை ளித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் மூலமாக இந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க | பவதாரிணியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா! என்ன செய்தார் தெரியுமா?

குழந்தையின் வீடியோ வைரல்..

விஜய்க்கு, வளர்ந்த ரசிகர்கள் மட்டுமன்றி குழந்தைகள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். இப்படி குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோவான விஜய், சினிமாவை விட்டு விலகுவது அந்த குட்டி ரசிகர்களின் இதயங்களையும் நொருக்கியுள்ளது. அப்படி ஒரு குழந்தை பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில் “இனி விஜய் நடிக்கமாட்டாராம்..விஜய் படம் எல்லாம் வராது..” என குழந்தையிடம் ஒருவர் கூற, உடனே அந்த குழந்தை முகம் வாடி, “ஏன் நடிக்கமாட்டாரு..” என்று கேட்கிறது. பின்னர், “அப்போ இனிமே விஜய் பாட்டெல்லாம் வராதா…ஏன்..?” என்று பாவமாக கேட்கிறது.

நெட்டிசன்களின் ரியாக்ஷன்..

ரசிகர்கள், இந்த குழந்தை பேசியுள்ள வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். “குழந்தைகளுக்கும் பிடித்த ஸ்டார் விஜய்..அவர்கள் கூட இதனால் சோமாகின்றனர்..” என கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், “இந்த குழந்தைக்காக மீண்டும் நடிக்க வா தலைவா..” என்று விஜய்யை டேக் செய்து கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்க | Simbu: சிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் சிம்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News