நடிகர் பிரகாஷ் ராஜ், தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக வலம் வரும் நடிகர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இயக்கும் படங்களுக்கு முன்னரெல்லாம் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு முதல் சாய்ஸாக இவர்தான் இருப்பார்.
மேடை நாடக கலைஞர்:
இன்று திரைத்துறையில் இருக்கும் பல கலைஞர்களுக்கு மேடை நாடகங்கள்தான் அடித்தளமாக அமைந்துள்ளன. அதே போலத்தான் பிரகாஷ் ராஜ்ஜிற்கும் மேடை நாடகம் நடிப்பதற்கான ஊக்கத்தை கொடுத்தது. ஆரம்ப காலகட்டத்தில் பிரகாஷ் ராஜ் பெங்களூர் கலாஷேத்ராவில் மாதம் 300 ரூபாய்க்கு நடிக்கும் ஒரு மேடை நடிகராக தனது தொங்கினார். ஆனால் இப்போதோ, அவர் நடிக்காத தென்னிந்திய படங்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம்.
ஆரம்ப கால சினிமா வாழ்க்கை:
ஒரு மேடை நடிகராக தொடங்கிய இவர் பிசிலு குதுரே என்ற கன்னட தொலைக்காட்சி தொடரில் நடித்தார். பின் நாட்களில் 1991 குடாடா பூதா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.
ராமாச்சாரி, ரணதீரா, நிஷ்கர்ஷா மற்றும் லாக்கப் டெத் போன்ற படத்தில் சில கன்னட படங்களில் துணை நடிகராக தனது நிலை நிறுத்தி கொண்டார்.
மேலும் படிக்க | Sivaangi: ‘குட்டி ஸ்ரேயா கோஷல்’ சிவாங்கிக்கு பிறந்தநாள் இன்று!
தமிழ் சினிமாவில் நுழைந்தது எப்படி?
1992 ஆம் ஆண்டு வெளியான ஹரகேய குறி என்ற படம்தான் இவரது சினிமா வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையக இருந்தது அமைந்தது. இந்த படத்தில் நடித்த கீத்தாவின் மூலம் கே. பாலச்சந்தருக்கு பிரகாஷ் ராஜ் அறிமுகமானார். இவரது நடிப்புக்கு பாலச்சந்தர் சபாஷ் போட்டு தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல படங்கள் வாய்ப்புகள் வர தொடங்கியது. முக்கியமாக நடிகர் பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்த கில்லி படம் 23 ஆண்டுகள் கழிந்த பின் இப்போது பாடல் கூட முத்துபாண்டி கதாபாத்திரம் மிரட்டலாக உள்ளது. முத்துபாண்டி கதாபாத்திரம் வில்லத்தனம் தற்போது தனலஷ்மி மீதும் உள்ள காதலாக பார்க்கப்படுகிறது.
வில்லன் டூ குணச்சித்திர நடிகர்:
தெலுங்கு படங்களில் வில்லனாக நடிப்பது மட்டுமன்றி, அந்த படத்தின் தமிழ் ரீ-மேக் படங்களிலும் வில்லனாக நடித்தவர் பிரகாஷ் ராஜ். முட்டை முட்டை விழிகளை இன்னும் பெரிதாக விரித்துக்கொண்டு, திரையில் ஹீரோக்கு எதிராக இவர் வந்து நின்றாலே ரசிகர்கள் அதிருவர். அந்த அளவிற்கு, கமர்ஷியல் படங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் வில்லனாக பார்க்கப்பட்டவர், பிரகாஷ் ராஜ். இன்று தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பலருக்கு வில்லனாக நடித்தவர் இவர்.
பயங்கர வில்லன்:
தொடர்ந்து வில்லனாகவே நடித்து வந்த இவர், கடந்த 13 ஆண்டுகளில் நிறைய குணச்சித்திர வேடங்களில் நடித்துவிட்டார். மொழி, அபியும் நானும், சந்தோஷ் சுப்ரமணியம், தோழா, பயணம், மகாநதி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான அண்ணாத்த, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களி்ல் கூட வில்லத்தனத்தை பெரிதும வெளிக்காட்டாத கதாப்பாத்திரமாகத்தான் வந்தார். வாரிசு படத்தில் வில்லனாக வந்தாலும் கடைசியில் திருந்தி வாழும் சக மனிதராகவே காண்பிக்கப்பட்டார்.
ஹீரோவாக பிரகாஷ்ராஜ்:
பிரகாஷ் ராஜ், வில்லன்-குணச்சித்திர நடிகர் என்பதை தாண்டி உன் சமையலறையில் படத்தில் ஹீராேவாகவும் நடித்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது. பெரிதாக ஹிட் அடிக்காத படம் என்றாலும் இந்த படத்திற்கென்று தனி ரசிகர்களும் உள்ளனர்.
மனதில் நின்ற கதாப்பாத்திரங்கள்:
கில்லி படத்தில் ‘ஹாய் செல்லம்..ஐ லவ்யூ’ என்று பற்களைகாட்டி கொண்டு சிரிக்கும் வில்லன் கதாப்பாத்திரத்தில் கலக்கியிருப்பார் பிரகாஷ் ராஜ். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் சிரித்துக்கொண்டே டென்ஷனை கன்டோல் செய்யும் காமெடடி வில்லனாக வந்து நம்மையும் சிரிக்க வைத்தார். சில படங்களில் வில்லத்தனத்திலேயே ஹீரோயிசத்தை காண்பிக்கும் அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இது மட்டுமன்றி, நல்ல நண்பனாக, அப்பாவாக என பல குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
பிரகாஷ் ராஜின் அரசியல் வாழ்கை:
பிரகாஷ் ராஜ், அரசியல் பிரச்சினைகளை வெளிப்படையாக விமர்சிக்கும் நடிகர்களில் ஒருவர். மத்திய அரசுக்கு எதிராக சமூக வலைதளப் பக்கத்தில் தனது கருத்துகளை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இதனால் தன்னுடன் நடிக்க, சில நடிகர்கள் பயப்படுகிறார்கள் என்றும் தனது தொழில் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Adah Sharma: தி கேரளா ஸ்டோரி நாயகி அடா சர்மாவின் மொபைல் எண் இணையத்தில் லீக்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ