சமூக வலைத்தளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது ட்விட்டர். இந்நிறுவனம் ஒவ்வொரு வருடம் இறுதியிலும் அந்த ஆண்டு முழுவதும் அதிகமாக பேசப்பட்ட வார்த்தைகள், ஹாஷ்டேக்குகள், அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்களை வெளியிடும். அந்த வகையில் 2021ம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட hashtag-யை வெளியிட்டுள்ளது.
hashtags that kept the conversation going pic.twitter.com/OGEAktTUGp
— Twitter India (@TwitterIndia) December 9, 2021
அதில் டாப் 10-ல் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 8-வது இடத்தை பிடித்து உள்ளது. Covid19 என்ற hashtag முதல் இடத்தில் உள்ளது. Tokyo ஒலிம்பிக் 4வது இடத்திலும், ஐபிஎல் போட்டி 5வது இடத்திலும் உள்ளது. மேலும் 2021ம் ஆண்டு அதிகமாக பேசப்பட்ட டாப் 5 படங்களில் விஜய்யின் Master மற்றும் Beast ஆகிய இரண்டு படங்கள் முதல் மற்றும் 3வது இடம்பெற்றுள்ளது. அஜித்தின் வலிமை 2வது இடத்தை பிடித்துள்ளது. சூர்யாவின் Jaibhim படம் 4வது இடத்தில் உள்ளது.
2021 Most tweeted movies on Twitter.
Two for #ThalapathyVijay, as the topper #Master and also #Beast make it to the top five. #Valimai which is one of the most awaited films of 2022 takes the second spot! pic.twitter.com/vXm6mZ5Yxg
— Siddarth Srinivas (@sidhuwrites) December 9, 2021
ட்விட்டரில் விஜய்யின் படங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகம் பேசப்பட்ட படங்களாக இடம்பெறுகிறது. 2018ல் விஜய்யின் Sarkar, 2019ல் Bigil, 2020ல் Master, 2021-லும் Master மற்றும் Beast படங்கள் இடம்பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜய் ஆக்டிவாக இல்லை என்றாலும் அவரது ரசிகர்கள் சாதனை செய்து வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியான Beast படத்தின் பஸ்ட் லுக் பொழுதுபோக்கில் அதிகம் லைக் செய்யப்பட்ட பதிவுகளில் முதல் இடம் பிடித்துள்ளது. இதனை தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Most RETWEETED / LIKED Tweet in ENTERTAINMENT#Beast First Look #VijayDominatedTwitter2021 pic.twitter.com/jLUiEeNUFC
— Actor Vijay Era (@ActorVijayEra) December 9, 2021
ALSO READ | 2021-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR