தமிழ் திரையுரலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கின்றன. விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஏற்கனவே பலமுறை ரிலீஸாகி இருக்கின்றன என்றாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நேரத்தில் ரிலீஸாவதால் திரைவட்டாரம் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், இது பிஸ்னஸ் ரீதியில் இரண்டு படங்களுக்கு சரியாக இருக்காது என திரையரங்க உரிமையாளர்கள் கருதுகின்றனர்.
வாரிசு vs துணிவு
வாரிசு படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியிருக்கிறார். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரிய தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜூ படத்தை தயாரித்திருக்கிறார். துணிவு படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க, அஜித் நடித்துள்ளார். இரண்டு தயாரிப்பாளர்களுமே பொங்கல் ரிலீஸை லாக் செய்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | விஜய் தான் நம்பர் 1; அதிக தியேட்டர் கொடுங்க - வாரிசு தயாரிப்பாளர் அதிரடி
வாரிசுக்கு சிக்கல் ஏன்?
துணிவு படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை தமிழக முதலமைச்சர் மகனும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெரும்பாலான தமிழ் படங்களை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டு வரும் நிலையில், அந்த நிறுவனம் வெளியிடும் படங்களை மட்டுமே தியேட்டர் உரிமையாளர்களும் லாக் செய்கின்றனர். அந்தவகையில், துணிவு படத்துக்காக இருக்கும் ஆயிரத்துக்கும் சொற்ப தியேட்டர்களில் 800க்கும் அதிகமான தியேட்டர்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் லாக் செய்திருக்கிறது.
வாரிசு வசூல் பாதிப்பு
இவ்வளவு தியேட்டர்களில் துணிவு படம் மட்டும் ரிலீஸானால், வாரிசு வெறும் 400க்கும் குறைவான தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அஜித் மற்றும் விஜய் ஆகியோர் சரிசமமான மாஸ் ஹீரோக்கள் என்றாலும் குறைவான தியேட்டர்களில் வாரிசு ரிலீஸாகும்போது அது நேரடியாக வசூலை பாதிக்கும். துணிவு வசூலுக்கு நிகரான வசூலை எதிர்பார்ப்பது மிகவும் கடினம். இதனால் இப்போதைக்கு துணிவு கை ஓங்கியிருப்பதால், வாரிசு படக்குழு என்ன செய்யப்போகிறது? என்பதை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை
வாரிசு படத்திற்கு குறைவான தியேட்டர்கள் மட்டுமே கிடைக்கும் சூழல் இருப்பதால், பொங்கல் ரிலீஸில் இருந்து ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் நெருக்கடி ஏற்படக் கூடாது என்றால், பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கினால், துணிவுக்கு கிடைக்கும் அதே வரவேற்பு வாரிசுக்கும் இருக்கும் என தெரிவித்துள்ளனர். வாரிசு படக்குழு பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்குமா? அல்லது துணிவுக்கு நிகரான தியேட்டர்களை பெறுவதில் முனைப்பு காட்டுமா? என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்து விடும்.
மேலும் படிக்க | பற்றி எரியும் தில்ராஜு பிரச்னை... அஜித் செய்த காரியம் - ஏகே ரசிகர்கள் கொண்டாட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ