தளபதி 66 டைட்டில் & பர்ஸ்ட் லுக்! வெளியானது அதிகார்வப்பூர்வ அறிவிப்பு!

தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஜூன் 21ம் தேதி மாலை 06.01க்கு வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 19, 2022, 04:43 PM IST
தளபதி 66 டைட்டில் & பர்ஸ்ட் லுக்! வெளியானது அதிகார்வப்பூர்வ அறிவிப்பு! title=

'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்தில் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார், மேலும் படத்தில் பிரபல நட்சத்திரங்களான பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா, சங்கீதா மற்றும் ஷாம் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் சில முக்கியமான காட்சிகள் ஹைதராபாத்தில் நிறைவு செய்யப்பட்டது, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சென்னைக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க | தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட விஜய்.. வைரலாகும் பர்த்டே Common DP!

#Thalapathy66FirstLook on 21st at 18:01#Thalapathy @actorvijay na @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_official @karthikpalanidp pic.twitter.com/8z9OPtvMdK

சமீபத்தில் 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.  முழுக்கமுழுக்க குடும்ப கதையம்சம் நிறைந்த படமாக உருவாகிவரும் இந்த படத்தை தில் ராஜுவின் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.  ஜூன்-23ம் தேதி விஜய்யின் பிறந்தநாளுக்கு இவரின் படங்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டுகள் எதுவும் வெளியிடப்படுமா என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அவரது பிறந்தநாளுக்கு முன்னதாகவே ஒரு முக்கியமான அப்டேட் வெளியாகவுள்ளது.

அதாவது 'தளபதி 66' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வரும் ஜூன்-21ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு அதன்படி அதிகாரபூர்வ அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது.  இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது.  இதேபோல ஏற்கனவே 'பீஸ்ட்'  படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விஜய்யின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  விஜய்யின் 'தளபதி 66' படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்போகும் 'RRR' பட பிரபலம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News