தமிழே தெரியாமல் தமிழ் படம் இயக்கும் நடிகர் விஜய்யின் மகன்?

Jason Sanjay Debut Movie: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். 

Written by - Yuvashree | Last Updated : Nov 25, 2023, 04:53 PM IST
  • விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
  • இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிரது.
  • ஜேசனுக்கு தமிழ் தெரியாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழே தெரியாமல் தமிழ் படம் இயக்கும் நடிகர் விஜய்யின் மகன்?  title=

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சில மாதங்களுக்கு லைகா நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தை டைரக்டு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், ஜேசன் சஞ்சய்க்கு தமிழே தெரியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

ஜேசன் சஞ்சய்..

நடிகர் விஜய்யின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய், தனது தந்தையுடன் இணைந்து ஆன் ஸ்கிரீனில் சில முறை தோன்றியிருக்கிறார். போக்கிரி படத்தில் வந்த “வசந்த முல்லை” பாடலிலும், வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்றிருந்த “நான் அடிச்சா தாங்க மாட்ட” பாடலிலும் அப்பாவுடன் சேர்ந்து குத்தாட்டம் பாேட்டிருக்கிறார். அதன் பிறகு சினிமா பக்கமே வராத இவர், அமெரிக்காவிற்கு படிக்க சென்றுவிட்டார். சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் படித்த இவர், கனடாவிற்கு உயர் படிப்பிற்காக சென்றார். டொரன்டோ நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திரைப்பட கலையை பயின்றார். 

கனடாவில் படிப்பை முடித்த ஜேசன், சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா திரும்பினார். சொந்த ஊருக்கு வந்த கையோடு, பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ராெடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க சம்மதித்தார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், அந்நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரனுடன் எடுத்துக்கொண்ட போட்டேவும் வெளியானது. நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படம் என்பதால், இப்படம் குறித்த அப்டேட்டுகள் மீது ரசிகர்கள் எப்போதும் ஒரு கண் வைத்துக்கொண்டே இருந்தனர். 

ஜேசனுக்கு தமிழ் தெரியாதா..? 

ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்து சினிமா வட்டாரங்களில் இருந்து சில தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி, ஜேசன் தனது படத்திற்கான கதையினை ஆங்கிலத்தில் எழுதி வருவதாக கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் எழுதுவது தமிழ் படங்களுக்கு ஒத்து வராது என்பதால் இவர் எழுதுவதை ஒருவர் அப்படியே தமிழில் மொழி பெயரத்து வருகிறாராம். இதனால், கதை எழுதுவதிலேயே குறிப்பிட்ட நாட்களுக்கு மேலாக சில நாட்கள் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. நவம்பர் மாதத்திற்குள் கதையை எழுதி முடிப்பேன் என கூறிய ஜேசன் சஞ்சய், இப்போது டிசம்பர் வரை டைம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தொடங்குவதிலும் தாமதம் ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | விஜய் மகன் இயக்கும் படத்தில் ஹீரோ யார் தெரியுமா? ‘இந்த’ 4 பேரில் ஒருவர்தான்..!

ஜேசன் படித்து வளர்ந்தது எல்லாமே தமிழ் அல்லாத பிற மொழி கல்வி என்றாலும், தமிழ் படங்களை இயக்கும் போது அதற்கு ஏற்ற அளவிற்காவது அவருக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்பது சிலரது கருத்தாக உள்ளது. தந்தை ஆன் ஸ்கிரீனில் “ஆளப்போறான் தமிழன்” என தமிழின் பெருமையை பேச, அவரது மகனுக்கு தமிழே தெரியலாமல் இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் இல்லாமல் நடந்த பூஜை..

படப்பிடிப்பு வேலைகள் துவங்கப்படுவதற்கு முன்னர், ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பூஜை வேலைகள் தொடங்கப்பட்டன. இதில் ஜேசனின் தந்தை விஜய் கலந்து கொள்ளவே இல்லை. இதில் மட்டுமல்ல, ஜேசனின் படம் சம்பந்தப்பட்ட எந்த வேலைகளிலுமே விஜய் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க காரணமாக இருந்ததே ஜேசனின் தாயார் சங்கீதாதான் எனவும், அவர் இலங்கையில் இருக்கும் தனது தந்தை மூலமாக தனது மகனுக்கு சினிமாவில் படம் இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விஜய், இந்த விஷயத்தில் தான் கொஞ்சம் கூட உதவி செய்ய மாட்டேன் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க | லியோ to சித்தா-2023 டாப் ஹிட் படங்களை ‘இந்த’ ஓடிடி தளங்களில் பார்க்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News