எளிய மனிதர்களுக்காகவும் சாதி, மத வர்க்க பேதங்களுக்கு எதிராகவும் தன் படங்களின் மூலம் கம்யூனிசத்தை ஆணித்தரமாக பேசிய கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த அமக்கள் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் (S.P.jananathan) அவர் இயக்கிய காதலுக்கு சான்றாக இயற்கை (Iyarkai) திரைப்படம் ஆகட்டும், ஒரு பழங்குடியின சமூகத்தில் பிறந்த ஒரு நபர் படித்து ஒரு நல்ல பணிக்கு வருவதற்கு அவர் சந்திக்கும் அவமானங்கள் ஏளனங்கள் என்ன என்பதை கூறும் பேராண்மை (Peranmai) படம் ஆகட்டும், இவரின் படம் முழுக்க முழுக்கவே கம்யூனிச சித்தாந்தங்கள் இல்லாமல் இருக்கவே இருக்காது.
திரையில் மூன்று மணி நேர படத்தில் உலக அரசியலையே பேசிவிடுவார். அடுத்ததாக மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியினை (Vijaysethupathi) வைத்து லாபம் (Laabam) திரைப்படத்தினை எடுத்து வந்தார். அந்த படம் முடிவடையும் நிலையில் உள்ள போதே, திடிரென்று உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். பின்னர் லாபம் படத்தின் ஒரு சில காட்சிகளை படக்குழுவே எடுத்தது.
லாபம் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ஓ.டி.டி தளத்தில் வெளியிடலாமா அல்லது திரையரங்குகளில் ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழு எண்ணிக்கொண்டிருந்த போது, தமிழக அரசு (TN Govt) தற்போது கொரோனா விதிமுறைகளுடன் (COVID-19 Guidelines) ஐம்பது சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கினை திறந்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது.
ALSO READ | Watch: விவசாயிகளின் பிரச்சனையை பேசும் ‘லாபம்’ திரைப்பட trailer!
இதையடுத்து படக்குழு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று லாபம் (Laabam) திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது என்று அறிவித்துள்ளனர்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் ஸ்ருதிஹசன் (Shruthihassan) கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். படத்தினை 7C நிறுவனமும் விஜய் சேதுபதி புரோடக்சன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு டி இமான் (D.imman) இசையமைத்துள்ளார். சமீபத்தில் தான் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR