'பீஸ்ட்' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நோ சொன்ன விஜய் : காரணம் இதுதான்

பீஸ்ட் படத்திற்காக தனிப்பட்ட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார் விஜய். அரசியல் காரணம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Mar 15, 2022, 03:51 PM IST
  • பீஸ்ட் ஆடியோ லான்ச் இல்லை
  • அரசியல் காரணம் இருக்குமோ?
  • ரசிகர் கூட்டம் எல்லாம் ஒரு காரணமா?
'பீஸ்ட்' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நோ சொன்ன விஜய் : காரணம் இதுதான் title=

பீஸ்ட் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று நடிகர் விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் படங்களில் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பிரமாண்டமாக நடத்துவது வழக்கம். அதன்படி சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வும், பிகில் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வும் தாம்பரத்தை அடுத்துள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்டது. அப்போது கூடிய கட்டுக்கடங்காத ரசிகர் பட்டாளத்தை கட்டுப்படுத்த போலீஸ் தடியடி நடத்தினர்.

மேலும் படிக்க | அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் - இது தான் காரணம்!

விஜய்யின் ரசிகர்களும் அப்போது ”தளபதியை பார்க்க வந்தோம். உள்ளேயே போக முடியல” என்று வேதனையை வெளிப்படுத்தினர். உண்மையில் கூடிய கூட்டத்தை ஏற்க முடியாமல் திக்கித் திணறியது சாய்ராம் கல்லூரி. இந்த நிலையில் கல்வி நிறுவனங்களில் சினிமா நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக சர்ச்சையும் எழுந்தது. தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்து வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி லீலா பேலஸ் ஹோட்டலில் அமைதியாக நடைபெற்றது.

Beast Poster

இந்த நிலையில்தான் பீஸ்ட் திரைப்படம் நிறைவு கட்டத்தை எட்டியிருக்கிறது. அதற்கான பாடல் வெளியீட்டு நிகழ்வு மார்ச் 20ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான பணிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று கூட போலி புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ஆனால் அந்த மாதிரியான பிரமாண்ட பாடல் வெளியீட்டு நிகழ்வு இருக்காது என சொல்லப்படுகிறது.

Beast Poster

ஒவ்வொரு பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் அரசியல் பேசுவது வழக்கம். இந்த முறை விஜய் அரசியல் பேசுவதை ஆளுங்கட்சியும் சன் பிக்ச்சர்ஸும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பாடல் வெளியீட்டு நிகழ்வையே நடத்த வேண்டாம் என்று விஜய்யும், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | பீஸ்ட் அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News