விஜய்-சங்கீதா விவாகரத்து சர்ச்சை.. த்ரிஷா லிப்லாக் ஆல் வந்த பிரச்சனையா?

விஜய்-சங்கீதாவுக்கு லியோ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே இருவருக்கும் விவாகரத்து நடந்து விட்டது என ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 21, 2023, 08:59 AM IST
  • நடிகர் விஜய், 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
  • சமீப காலமாக விஜய், சங்கீதா விவாகரத்து செய்தி வெளியாகி ஏற்படுத்தி வருகிறது.
  • லியோ படத்தில் விஜய் - த்ரிஷாவின் லிப் லாக் சீன் இடம்பெற்றுள்ளது.
விஜய்-சங்கீதா விவாகரத்து சர்ச்சை.. த்ரிஷா லிப்லாக் ஆல் வந்த பிரச்சனையா? title=

விஜய்-சங்கீதா விவாகரத்து சர்ச்சை: விஜய்-சங்கீதாவுக்கு லியோ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே இருவருக்கும் விவாகரத்து நடந்து விட்டது என ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இப்படியாக வெளிவந்துள்ள இந்த செய்தி கடும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 

நடிகர் விஜய்:
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர், நடிகர் விஜய். தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன், நடிகர் விஜய் என்பது அனைவருக்கும் தெரியும். தனது தந்தை 1984ஆம் ஆண்டு இயக்கிய ‘வெற்றி’ குழந்தை கதாப்பாத்திரமாக நடித்து சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த இவர், தற்போது கோலிவுட்டின் ‘வெற்றி’ நாயகனாக வலம் வருகிறார். இவர் ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் பல தோல்வியை சந்தித்தாலும், அவை அனைத்துமே இன்றளவும் 90ஸ் குழந்தைகள் மத்தியில் பசுமையான நினைவாக உள்ளது. தந்தை மூலம் திரையுலகிற்கு வந்தாலும், சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை தானே ஏற்படுத்திக்கொண்டார், விஜய். “எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய்..” என கூறி வந்தவர்கள், “விஜய்யின் தந்தைதான் எஸ்.ஏ.சந்திரசேகர்..” என்று கூறுகின்றனர். அந்த அளவிற்கு கோலிவுட்டில் புதிய சிகரத்தை தொட்டு விட்டார். 

விஜய், நடிகராக மட்டுமன்றி கோலிவுட்டின் பன்முக திறமை கொண்ட கலைஞராகவும் வலம் வருகிறார். ஆரம்பத்தில் நடித்து மட்டும் வந்த இவர், அதன் பிறகு தான் நடிக்கும் படங்களில் தனக்கான பாடல்களை பாடவும் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மெலடி பாடல்களை பாடி வந்த இவர், அதன் பிறகு குத்து-ஸ்டைல் பாணியில் உள்ள பாடல்களுக்கு மாறினார். தமிழ் சினிமாவில் நன்றாக நடனம் ஆடும் திறமை கொண்ட நடிகர்களுள் விஜய்யும் ஒருவர். இவரை போல வேகமாகவும் உணர்ச்சியுடனும் தனித்துவமாகவும் வேறு எந்த நடிகரும் நடனமாடுவதில்லை என சில ரசிகர்கள் கருத்துகள் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | மருத்துவமனையில் பரிதாபமாக கிடக்கும் இளம் நடிகை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய்யின் குடும்பம்:
நடிகர் விஜய், 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். 23 வயதாகும் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் திரைப்பட இயக்கம் குறித்த படிப்பினை படித்துள்ளார். சமீப காலமாக விஜய், சங்கீதா விவாகரத்து செய்தி வெளியாகி ஏற்படுத்தி வருகிறது. 

ஏற்கனவே வாரிசு பட இசை வெளியீட்டின் போது இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. அதிலும் கீர்த்தி சுரேஷ் தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என்று உறுதியாக சொல்லப்பட்டது. அந்த சூழலில் தான் லியோவில் த்ரிஷா கமிட் செய்யப்பட்டார். ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே இவர்களைப் பற்றிய வதந்தி உலா வந்தது.

விஜய் -  த்ரிஷா லிப் லாக்:
இந்த நிலையில் இப்போது அதுவே விவாகரத்துக்கு காரணமாக அமைந்து விட்டதாம். அதாவது லியோ படத்தில் முதல் முறையாக விஜய் -  த்ரிஷாவின் லிப் லாக் சீன் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையில், த்ரிஷாவுடன் விஜய் வெளிநாடுகளில் டேட்டிங் செய்து வந்ததாகவும் வதந்திகள் பரவியது. 

அது மட்டுமின்றி லியோ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே இருவருக்கும் விவாகரத்து நடந்து விட்டது என ஒரு அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. அதேபோல் விஜய்-சங்கீதா திருமண நாளன்று லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை அன்று விஜய் சந்திப்பார் எமதிரு நினைத்த நிலையில், அங்கு செல்லாமல் த்ரிஷாவுடன் இருந்ததாக  கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | “இமானின் முன்னாள் மனைவி பொய் சொல்றாங்க..” பிரபல நடிகை பரபரப்பு பேச்சு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News