தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் விஜய், அரசியலில் ஈடுபட உள்ளதாக கடந்த சில வருடங்களாகவே தகவல்கள் பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கம் தற்போது மக்கள் நலப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
விஜய் மக்கள் இயக்கம்..
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம், விஜய் சார்பாக மக்களுக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த இயக்கத்திற்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளும் உள்ளனர். சமீபத்தில் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில், 1600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழா, பல அரசியல் பிரமுகர்களால் விமர்சிக்கப்பட்டாலும் மக்களிடையே விஜய்க்கு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து, நடிகர் விஜய், இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ளார்.
மேலும் படிக்க | Fact Check: இளம் நடிகரை திருமணம் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..?
நிர்வாகிகளை சந்தித்த விஜய்..
விஜய், இன்று தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை பனையூர் இல்லத்தில் சந்தித்தார். இதில், மாவட்ட வாரியாக முக்கிய பொருப்பில் இருக்கும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் செல்போன்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் வாசலிலேயே வாங்கி வைக்கப்பட்டன. இதையடுத்து, சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் இந்த ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள்..
நடிகர் விஜய், தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார். அரசியலுக்கு வந்துவிட்டால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவதாக விஜய் கூறியதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தவிர, விஜய் அரசியலுக்கு வந்தால் தங்கள் திட்டம் என்ன என்பது குறித்தும் அவர்கள் பேசினர்.
நிர்வாகிகளின் ப்ளான்..
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கூட்டத்தில் ஆலாேசிக்கப்பட்ட முக்கியமான மூன்று விஷயங்களை கூறினர். அதில் முதலாவது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்க மாட்டேன் என கூறியதுதான். விஜய் அரசியலுக்கு வந்துவிட்டல் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எல்லா திட்டங்களும் தங்களிடம் ரெடியாக இருப்பதாகவும், அவர் வந்தால் மட்டும் போதும் அனைத்தையும் தொடங்கி விடுவோம் என்றும் அவர்கள் கூறினர். விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடாமல் அவ்வப்போது அரசியலுக்கு வந்தாலும் அவருக்கு தங்களின் முழு ஆதரவு இருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பெரிய கைகளின் துணை..
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், அவருக்கு ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களுடைய முழு ஆதரவும் இருக்கும் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். விஜய்யின் கை அசைவுக்காகத்தான் காத்துக்கொண்டிருப்பதாகவும் அவர் ‘உம்’ சொல்லிவிட்டால் அனைத்து பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுதான் கடைசி படமா..?
லியோ படத்தின் தனது பங்கினை சமீபத்தில் நடித்து காெடுத்த விஜய், அடுத்து வெங்கட் பிரபுவுடன் இன்னொரு படத்தில் இணைகிறார். அந்த படத்தில் அவர் ஜாேதிகாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இதுதான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் எனவும் பேசப்படுகிறது. விஜய் 2026தேர்தலை மனதில் வைத்து அரசியலில் இறங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பணம் கொடுக்காமல் ஏமாற்றிய அஜித்-பிரபல தயாரிப்பாளரின் ‘பகீர்’ ஸ்டேட்மெண்ட்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ