அமெரிக்க டிவி ஷோவில் ஒளித்த விஜய்யின் “நான் ரெடி” பாடல்-வைரலாகும் வீடியோ!

Vijay Naa Ready Song In American TV Show: அமெரிக்காவில் நடந்த ஒரு டிவி ஷோவில் விஜய்யின் “நான் ரெடி” பாடலுக்கு சில இந்தியர்கள் நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Feb 14, 2024, 03:39 PM IST
  • நான் ரெடி பாடல் லியோ படத்தில் இடம் பெற்றிருந்தது
  • இந்த பாடலுக்கு அமெரிக்க டிவி ஷோவில் சிலர் நடனமாடினர்
  • இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
அமெரிக்க டிவி ஷோவில் ஒளித்த விஜய்யின் “நான் ரெடி” பாடல்-வைரலாகும் வீடியோ! title=

Vijay Naa Ready Song In America's Got Talent TV Show: விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த படம், லியோ. இந்த படத்தில் “நான் ரெடி” பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலை விஜய் பாடியிருந்தார். இப்பாடலுக்கு அமெரிக்காவில் நடந்த ஒரு டிவி ஷாேவில் சிலர் நடனமாடியிருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

லியோ திரைப்படம்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் ஹீரோவாக நடித்திருந்த படம், லியாே. இந்த படத்தில் த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த போதும், ரசிகர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரேவற்பு கிடைத்தது. இப்படத்தில் இடம் பெற்றிருந்த “நான் ரெடிதான் வரவா” பாடலும் படம் வெளியாவதற்கு முன்பே பெரிய ஹிட் அடித்தது. 

‘நான் ரெடி’ பாடல்..

லியோ படத்தில் இரண்டாம் பாதிக்கு மேல் வரும் பாடல், “நான் ரெடிதான் வரவா..”. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார். இவருடன் சேர்ந்து அசல் கோளார் பாடியிருப்பார். இப்பாடலுக்கு அனிருத் அமைத்திருந்த இசை, பலரை ஆட வைத்தது. இப்பாடலில் இடம் பெற்றிருந்த சில வரிகளும், வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு விஜய் போஸ் கொடுப்பது போல இருந்த புகைப்படங்களும் சர்ச்சைகளை கிளப்பியது. இதையடுத்து, அந்த வரிகள் இடம் பெற்றிருந்த இடங்களில் ‘டவுன் டவுன்’ இசை கொடுக்கப்பட்டது. வீடியோ பாடலில் ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த மாற்றம் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த பாடல் அமெரிக்கா வரை தற்போது சென்றுள்ளது. 

மேலும் படிக்க | தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? இவர்களின் பிரிவிற்கு காரணம் என்ன?

அமெரிக்க டிவி ஷோ:

சூப்பர் சிங்கர், டான்ஸ் ஜோடி டான்ஸ், கலக்கப்போவது யாரு? என தமிழ் தொலைக்காட்சிகளில் புதிய திறமைசாலிகளை கண்டு பிடிக்க பல டிவி ரியாலிட்டி ஷோக்கள் உள்ளன. அதே போல அமெரிக்காவிலும் இதற்கென்று பல டிவி ஷோக்கள் உள்ளன. அப்படி பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக விளங்குவது, “America’s Got Talent” என்ற நிகழ்ச்சி. இதில், அமெரிக்கர்கள் பலர் தங்களின் திறமைகளை வெளிகாட்டி கடைசியில் பட்டம் வெல்வர். அது நடன திறமையாக இருக்கலாம், க்ரூப் டான்சிங், கதை சொல்லல் போன்ற அனைத்து திறமைகளையும் மேடையில் செய்து காட்டலாம். 

America’s Got Talent நிகழ்ச்சியில், இந்தியர்கள் சிலர் அவ்வப்போது கலந்து கொள்வது உண்டு. ஒரு பிரபல நடனக்குழு இந்நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டுள்ளது. அந்த குழு, “நான் ரெடி” பாடலுக்கு ஸ்டண்ட்-நடனம் செய்து செலிப்பிரிட்டி நடுவர்களை கவர்ந்துள்ளனர். 

வைரல் வீடியோ..

America’s Got Talent நிகழ்ச்சியில் நான் ரெடி பாடலுக்கு இந்தியர்கள் நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் ‘வலிமை’ படத்தில் இடம் பெற்றிருந்த “நாங்க வேற மாறி” பாடலுக்கு நடனமாடிய அவர்கள், பின்பு நான் ரெடி பாடலுக்கு பிரமிட் போல நின்று ஸ்டண்ட் செய்து நடுவர்களையும் பார்வையாளர்களையும் அசத்தினர். இவர்களின் நடனத்தை பார்த்த நடுவர்கள் எழுந்து நின்று கைத்தட்டினர். பிறகு இதற்கு நல்ல கமெண்ட்ஸ்களையும் கொடுத்தனர். 

மேலும் படிக்க | Valentines Day 2024: ‘காதல் கண்கட்டுதே..’ காதலித்து திருமணம் செய்து கொண்ட திரை பிரபலங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News