ஹெச்.வினோத்தை ஓவர்டேக் செய்யும் விக்னேஷ் சிவன்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:44 AM IST
  • அஜித்தை இயக்கும் விக்னேஷ் சிவன்
  • நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
  • ஏகே 61-க்கு முன்பே ரிலீஸாகிறதா?
ஹெச்.வினோத்தை ஓவர்டேக் செய்யும் விக்னேஷ் சிவன்? title=

வலிமை படம் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மீண்டும் அதே கூட்டணியுடன் அடுத்த படம் நடிக்க உள்ளார். ஹெச் வினோத் இயக்க, போனிக் கபூர் ஏகே 61 படத்தை தயாரிக்கிறார். சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான வலிமை திரைப்படம், தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. சமூகவலைதளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆஃபீஸ் ரீதியாக ஹிட் அடித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் வலிமை படத்துக்கான வரவேற்பு கிடைத்தது. பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல கலெக்ஷன் ஆகியுள்ளது.

மேலும் படிக்க | விஜய் பாடியிருக்கும் ‘பீஸ்ட்’ செகண்ட் சிங்கிள் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

இதனையடுத்து ஏகே 61 படத்துக்கான பணிகளை முடித்துள்ள வினோத், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, யாரும் எதிர்பார்க்காத வகையில் அஜித்குமார்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப்போகும் படத்துக்கான தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். அனிரூத் இசையமைக்கிறார். வழக்கமாக ஒரு படம் முடிந்தபிறகு அடுத்த படத்தை தொடங்கும் அஜித், திடீரென விக்னேஷ் சிவனுடனான படத்தில் கமிட்டாகியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது லேட்டஸ்டாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கும் படம் ஏகே 61வுக்கு முன்பாகவே ரிலீஸாகும் என கூறப்படுகிறது. அதாவது இதுநாள் வரை ஏகே 61 வினோத் படம் என கருதப்பட்ட நிலையில், அவரை ஓவர்டேக் செய்துள்ள விக்னேஷ் சிவன் ஏகே 61 படத்துக்கான இயக்குநராக மாறியுள்ளார். வினோத்தின் படம் விக்னேஷ் சிவன் படத்துக்குப் பிறகே ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வலிமை படத்தில் அஜித்துக்காக விக்னேஷ் சிவன் பாடல் ஒன்றை எழுதியிருந்தார். இப்போது அவரை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் படிக்க | இசைஞானியோடு பாடும் முதல் வாய்ப்பு - நெகிழும் தேவி ஸ்ரீபிரசாத்

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News