P.S.வினோத்ராஜ் இயக்கத்தில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மூலம் தயாரிப்பில் உருவான படம் தான் 'கூழாங்கல்'. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 30 நாட்களில் தயாரித்து முடிக்கப்பட்டது.
ALSO READ மாநாடு படத்தின் 2 நாள் வசூல் விவரங்களை வெளியிட்ட தயாரிப்பாளர்!
இப்படத்தை இயக்கிய இயக்குனரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் இது. ரோட்டர்டாம் 50வது சர்வதே திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு உயரிய விருதான 'டைகர்' விருதினை வென்றது. இப்படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த திரைப்படம் 2022-ம் ஆண்டில் நடைபெறும் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை விக்னேஷ் சிவன் திடீரென்று சந்தித்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன் "ஆஸ்கார் விருதிற்கு தேர்வான 'கூழாங்கல்' படத்திற்கு உங்களின் வாழ்த்திற்கும், ஆதரவிற்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
Blessed & honoured to meet the honourable
Minister of Information and Broadcasting of India @ianuragthakur sirThankU sir for ur wishes & support for #Pebbles #Nayanthara @Rowdy_Pictures to reach the #Oscar stage
official entry for the 94th academy awards @VinojBJP pic.twitter.com/BZDkAP3Log— Vignesh Shivan (@VigneshShivN) November 26, 2021
அறிமுக இயக்குனரான வினோத்ராஜ் தனது முதல் படமான 'கூழாங்கல்' மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு, பல உயரிய விருதுகளையும் வென்று வருகிறார்.
ALSO READ சூப்பர் ஸ்டார் ஏரியாவில் புது வீடு வாங்கிய லேடி சூப்பர் ஸ்டார் - ஒன்றல்ல, இரண்டு ப்ளாட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR