ஜூனியர் என்டிஆருடன் புதிய படம்..வெற்றிமாறன் அளித்த முக்கிய தகவல்

Vetrimaaran Jr NTR Movie: புதிய படத்திற்காக தெலுங்கு பட நடிகர் ஜூனியர் என்டிஆருடன் வெற்றிமாறன் இணையப் போகிறார் என வெளியாகி வரும் வதந்திக்கு இயக்குநர் வெற்றிமாறன் தற்போது பதிலளித்துள்ளார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 12, 2023, 09:51 AM IST
  • ஜூனியர் என்.டி.ஆருடன் இணைகிறேனா.
  • வெற்றிமாறன் சொன்ன பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி.
ஜூனியர் என்டிஆருடன் புதிய படம்..வெற்றிமாறன் அளித்த முக்கிய தகவல் title=

வெற்றிமாறன் ஜூனியர் என்டிஆர் திரைப்படம்: ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில், வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது, சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்

விடுதலை முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் ரசிகர்கள் விடுதலை இரண்டாம் பாகத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். இதனிடையே தற்போது இயக்குநர் வெற்றி மாறன் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருக்குக் கதை ஒன்றை சொல்லி அந்த படத்தையும் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | விஜய்யின் வாழ்வில் மிக சிறப்பான நாள் இன்று... ஏன் தெரியுமா?

இந்த நிலையில், ஐதராபாத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட வெற்றிமாறன் இதுபற்றி தகவல்கள் ஒன்றை தெரிவித்துள்ளார், அதன்படி ஜூனியர் என்டிஆரோடு பேச்சுவார்த்தை நடப்பது உண்மைதான். ஆனால் அந்த படம் உருவாக காலம் ஆகும் என்று இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியான முதல் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும்   இதில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும், முதல் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாம் பாகத்தில் தனுஷும் நடிக்கவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது.

இதற்கிடையில் தற்போது இயக்குநர் வெற்றி மாறன் கமல், விஜய் ஆகியோருக்கு கதை சொல்லியுள்ளதாகவும் ஏற்கனவே இயக்கி முடித்த வடசென்னை  படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | முடிவுக்கு வரும் ராஜா ராணி சீரியல்..இன்னும் 13 நாட்களில் கிளைமாக்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News