வீட்ல விசேஷம் படம் எப்படி இருக்கு - திரை விமர்சனம்

வீட்ல விசேஷம் படத்தின் திரை விமர்சனம்.

Written by - Melwin S | Last Updated : Jun 17, 2022, 02:10 PM IST
  • வீட்ல விசேஷம் திரைப்படம் இன்று வெளியானது
  • ஹிந்தி படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது
வீட்ல விசேஷம் படம் எப்படி இருக்கு - திரை விமர்சனம் title=

'பதாய் ஹோ’ படம் ஹிந்தி திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பார்வையாளர்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றது. அந்தப் படம் தற்போது வீட்ல விசேஷம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியிருக்கிறது. ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பலர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

படத்தில் ஆர்ஜே பாலாஜி பள்ளி ஆசிரியர் அந்த பள்ளியின் உரிமையாளர் அபர்ணா பாலமுரளி இருவரும் அதே பள்ளியில் படித்து காதலித்து வருகின்றனர். பாலாஜியின் பெற்றோர் 50 வயதை கடந்த சத்யராஜ் ,ஊர்வசி. ஊர்வசி இதில் கர்ப்பமாகிவிட இதை அவர்கள் எப்படி வெளியில் சொல்கிறார்கள் அதை தங்கள் பிள்ளைகள் எப்படி எடுத்துக்கொள்கின்றனர் என்பது கதையின் லைன்.

மேலும் படிக்க | 'ஜெயிலர்' வேடத்தில் மிரட்டும் அண்ணாத்த! - வெளியானது Thalaivar 169 டைட்டில்

சத்யராஜும், ஊர்வசியும் எதார்த்தமாக நடித்துள்ளனர். பாலாஜி தனது காமெடியை ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாமல் படம் முழுக்க எடுத்து சென்றிருக்கிறார். முத்துக்குமாரின் ஒளிப்பதிவு கவரும்படி இருக்கிறது. பா. விஜய் வழக்கம்போல் தனது முத்திரை வரிகளை எழுதியிருக்கிறார். ஆனால் இசையில் க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் எடிட்டிங்கும் கவனிக்கவைக்கிறது.

மேலும் படிக்க | ’புஷ்பா’ நாயகனை இயக்கும் பிரபல தமிழ் இயக்குநர் - அறிவிப்பு விரைவில்

இந்தப் படத்தை    Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர்   Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ளனர்.

Veetla Vishesham

தமிழ் சினிமாவில்  சமீபகாலமாக ஆக்‌ஷன் ,திரில்லர் பாணி படங்கள் அதிகம் வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில் இந்தக் கதை சற்று மாறுதலாக உள்ளது ஒரே ஆறுதல்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News