கிறிஸ்தவ முறைப்படி 3வது முறை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார்

கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார்.

Last Updated : Jun 28, 2020, 11:30 AM IST
கிறிஸ்தவ முறைப்படி 3வது முறை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் title=

நடிகர் விஜய்குமார் குறிப்பாக தமிழ் சினிமா துறையில் அதிகம் பிரபலமானவர். இவரது மகள்களில் ஒருவர் வனிதா விஜயகுமார். சினிமா குடும்பத்தை சேர்ந்த நடிகை வனிதா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஒரு சில படங்களில் இவர் ஹீரோயினாக நடித்தார். 

இதனை தொடர்ந்து 19 வயதிலேயே நடிகர் ஆகாஷை திருமணம் செய்த வனிதா அவருடன் ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகளை பெற்றார். பின்னர் அவரை விவாகரத்து செய்த வனிதா ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அவருடன் ஒரு பெண் குழந்தையை பெற்ற வனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார்.

கடந்த ஆண்டு தனியார் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார். இதனை தொடர்ந்து அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வின்னரானார். தொடர்ந்து யூட்யூப் சேனல் தொடங்கினார் வனிதா. அண்மையில் அவரது திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து தனக்கு திருமணம் நடைபெறவுள்ளது உண்மைதான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வனிதா. 

 

 

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே வனிதா பீட்டர் பால் திருமணம் இன்று எளிமையாக நடந்து முடிந்தது. கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை வனிதா விஜயகுமார் கரம்பிடித்துள்ளார். இருவரும் மோதிரம் மாற்றியக் கையோடு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளனர். வனிதா தனது பெற்றோரான விஜயக்குமார் - மஞ்சுளா திருமண நாளிலேயே தனது மூன்றாவது திருமணத்தை செய்து கொண்டுள்ளார்.

Trending News