என்னாச்சி வனிதா விஜயகுமாருக்கு.. பிரதீப் ஆதரவாளர் செய்த ஷாக்கிங் செயல்

Vanitha Vijayakumar Brutally Attacked By Pradeep Supporters: பிரபல நடிகை வனிதா விஜயகுமார் மீது பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 26, 2023, 10:48 AM IST
  • பிக் பாஸில் சில டிஜிட்டல் முகங்களும் பங்கேற்பாளர்களாக உள்ளனர்.
  • வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  • வனிதா விஜயகுமார் மீது பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் தாக்குதல்.
என்னாச்சி வனிதா விஜயகுமாருக்கு.. பிரதீப் ஆதரவாளர் செய்த ஷாக்கிங் செயல் title=

நடிகை வனிதா விஜயகுமார் மீது பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிக் பாஸ் 7 தமிழ்:
ஆங்கிலம், இந்தி என பிற மொழிகளில் வெவ்வேறு பெயர்களுடன் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ். தமிழில், 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் டி.ஆர்.பி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிதான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சின்னத்திரை தொடர்களை விட, இந்த நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இந்த நாள் வரை சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. பெரிய திரை மற்றும் சின்னத்திரையில் தோன்றிய சில முகங்களும், சில டிஜிட்டல் முகங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாக உள்ளனர்.

பிரதீப் ஆண்டனி விவகாரம் :
இதயனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி ஆரம்பத்தில் இருந்து டாஸ்க்குகளில் சவாலான போட்டியாளராக விளங்கினார். ஆனால் இடையில் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரம் பெரும் புயலை இணையத்தில் கிளப்பியது. பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும், கமல்ஹாசனையும் பிரதீப் ஆண்டனிக்கு சப்போர்ட் செய்து விமர்சித்தனர்.

மேலும் படிக்க | தமிழ், தெலுங்கு என பிரித்து வைக்க தேவையில்லை! Hi Nanna விழாவில் நானி பேச்சு!

நடிகை வனிதா விஜயகுமார்:
மறுபுறம் இந்த பிக்பாஸ் 7 வது சீசனில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கெடுத்து இருக்கிறார். அவருக்கு ஆதரவாக பிக்பாஸ் விமர்சனம் என்ற பெயரில் யூடியூப் சேனலில் பேசி வருகிறார். அதேபோல் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

நடிகை வனிதா மீது தாக்குதல்:
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை வனிதா, நடிகர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தன்னை தாக்கியதாக முகத்தில் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது.,

முகத்தில் அடிபட்டு காயம் ஏற்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‘என்னை கொடூரமாக தாக்கியது யார் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். அந்த நபர் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் என்று சொல்லி கொள்பவர். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டு விட்டு என் காரில் இறங்கி நடந்துக் கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சௌமியா வீட்டருகே இருட்டான பகுதியில் நிறுத்தியிருந்தேன். எங்கிருந்தோ ஒரு ஆள் தோன்றி ரெட் கார்டு குடுக்ரீங்களா னு சப்போர்ட் வேரா என்று சொல்லி என் முகத்தில் பலமாக அடித்துவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் ஏற்பட்ட இடத்தில் ரத்தம் வழிந்து பயங்கர வலியாக இருந்தது. நநள்ளிரவு 1 மணியளவில் அருகில் யாரும் இல்லை. நான் என் சகோதரியை கீழே வரும்படி அழைத்தேன், பிறகு அவர் இந்தச் சம்பவத்தைப் போலீஸில் தெரிவிக்கும்படி வலியுறுத்தினார். ஆனால் நான் அவளிடம், போலீஸில் தெரிவிப்பதில் நம்பிக்கை இழந்து விட்டேன் என தெரிவித்தேன். 

நான் முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினேன், தாக்கியவரை அடையாளம் காண முடியவில்லை. அந்த நபர் பைத்தியக்காரத்தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. நான் திரையில் தோன்றும் உடல் நிலையில் இல்லாததால் எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். இதுபோன்று விஷயங்களில் ஈடுபடுபவர்களை ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு அடி தூரத்தில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | இந்த ஆண்டு IMDb-ல் அதிக ரேட்டிங் பெற்ற சிறந்த தமிழ் படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News