Valimai teaser Update: வலிமை டீசர் தொடர்பாக கசிந்த முக்கிய தகவல்

வலிமை படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 18, 2021, 08:24 AM IST
Valimai teaser Update: வலிமை டீசர் தொடர்பாக கசிந்த முக்கிய தகவல் title=

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் ணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ALSO READ | வலிமை படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிறது; படக்குழு கூறுவது என்ன

ஏறக்குறைய இரண்டு வருடங்களாக இந்த படம் பற்றி எந்தவித தகவலும் வெளியிடாமல் இருந்து வந்த படக்குழு தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவற்றை ரிலீஸ் செய்தது. 

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக வலிமை படத்தின் பாடல்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் என யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் தெரிவித்து இருந்தார் இதனை அடுத்து தற்போது வலிமை டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

வலிமை படத்தின் டீஸரை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.  மேலும் இந்த படம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் அதாவது தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News