இணையத்தை தொடர்ந்து தொலைக்காட்சியிலும் சாதனை படைக்க போகும் வலிமை!

வலிமை திரைப்படம் மே 1ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 24, 2022, 01:07 PM IST
  • வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியானது.
  • ஓடிடியில் சாதனை படைத்தது வலிமை.
  • தற்போது AK61 படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
இணையத்தை தொடர்ந்து தொலைக்காட்சியிலும் சாதனை படைக்க போகும் வலிமை! title=

நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் நடித்த வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் படம் வெளியானதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய கொண்டாட்டங்கள் நடைபெற்றது, அஜித் ரசிகர்களால் திரையரங்கமே திருவிழா காட்சி போல் இருந்தது. மேலும் இப்படத்தில் இருந்து வெளியான ட்ரைலர் வலிமை படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Valimai

மேலும் படிக்க | தளபதி 66-ல் நடிக்க மோகன் நோ சொன்னதால் களமிறங்கிய சாக்லெட்பாய்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் இரண்டு விதமான விமர்சனங்களை பெற்றது. ஒரு தரப்பினர் படம் இண்டர்நேஷனல் லெவலில் இருக்கிறது என்றும், ஒரு தரப்பினர் படம் பிடிக்கவில்லை என்றும் கூறிவந்தனர்.  இருப்பினும் திரையரங்குகளில் வலிமை படம் சிறப்பாக ஓடியது.  அதன்பிறகு ஜீ5 ஓடிடி தளத்தில் வலிமை படம் வெளியாகி இணையத்தில் கலக்கியது.  200 மில்லியன் ஸ்ட்ரீமிங் பெற்று ஓடிடியில் புதிய சாதனை படைத்தது வலிமை படம்.

Valimai poster

தற்போது இணையத்தில் தொடர்ந்து தொலைக்காட்சியிலும் வலிமை படம் சாதனை படைக்க உள்ளது. மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளான அன்று படம் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.  தற்போது அஜித் வினோதுடன் 3வது முறையாக AK61 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கியது, குறுகிய காலத்தில் இந்த படத்தை எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அஜீத் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

 

மேலும் படிக்க | ரஜினியின் இடத்தில் விஜய்- பின்னணியில் கமல்ஹாசன்?! கசிந்த புதிய தகவல் இதோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News