ட்விட்டரில் தனுஷின் ப்ளூ டிக் நீக்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ப்ளூ டிக்கை நீக்கி உள்ளது ட்விட்டர் நிறுவனம்.  

Written by - RK Spark | Last Updated : Jul 9, 2022, 10:41 AM IST
  • தனுஷின் வெரிபைடு பேட்ஜ் ட்விட்டரில் நீக்கம்.
  • சிறிது நேரத்தில் மீண்டும் வழங்கியது ட்விட்டர்.
  • தனுஷ் ரசிகர்கள் சிறிது நேரம் அதிர்ச்சி.
ட்விட்டரில் தனுஷின் ப்ளூ டிக் நீக்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! title=

ட்விட்டர் நிறுவனம் நடிகர் நடிகைகள்,  அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சமூகத்தில் முக்கியமான இடத்தில் உள்ள நபர்களுக்கு ப்ளூ டிக் என்னும் வெரிபைடு பேட்ஜ் வழங்கி வருகிறது.  இதன் மூலம் போலி கணக்குகளை தவிர்க்கவும், சம்பந்தப்பட்ட நபர்களை எளிதாக கண்டு பிடிக்கலாம்.  மேலும் இது ஒரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.  பல முக்கிய நபர்களுக்கு கூட இந்த ப்ளூ டிக் கிடைப்பது இல்லை.

dhansu

மேலும் படிக்க | இரவின் நிழல் படம் வெளியாகுமா? வந்தது புதிய சிக்கல்!

இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் ப்ளூ டிக்கெட்டை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. பொதுவாக ஆக்டிவாக இல்லாத அக்கவுண்டுகள் மற்றும் அக்கவுண்டின் பெயரை மாற்றினால் இவ்வாறு ப்ளூ டிக் நீக்கப்படும். ஆனால் தனுஷ் ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு எந்த ஒரு காரணமும் இதுவரை ட்விட்டர் நிறுவனம் சொல்லவில்லை.  கடந்த ஆண்டு தோனியின் அக்கவுண்டில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டு பின்பு சிறிது நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டது.

மேலும் அரசியல் பிரபலம் மற்றும் நடிகை குஸ்புவின் ப்ளூ டிக்கும் இதே போல் நீக்கப்பட்டு பின்பு வழங்கப்பட்டது.  நேற்று இரவு தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான The Gray Man படம் ஜுலை 22ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வந்தது.  இதனை ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் தற்போது தனுஷின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  பின்பு சிறிது நேரத்தில் மீண்டும் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் வழங்கியது.

dhansu

மேலும் படிக்க | ரோலக்ஸ் சூர்யா பற்றி முதன் முதலாக மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News