ஹிந்தியில் கொடி பறக்கவிடும் தனுஷ்..!

ஹிந்தியில் வெளியிடப்பட்ட தனுஷின் ’மாரி 2’ மற்றும் அசுரன் திரைப்படங்களை யூடியூப்பில் மட்டும் சுமார் 20 கோடி பேர் பார்த்துள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 28, 2022, 05:14 PM IST
  • ஹிந்தி டப்பில் ஹிட் அடித்த தனுஷ் திரைப்படங்கள்
  • மாரி 2, அசுரன் திரைப்படங்களுக்கு வரவேற்பு
  • புதியதாக 2 பாலிவுட் படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்
ஹிந்தியில் கொடி பறக்கவிடும் தனுஷ்..! title=

2015 ஆம் ஆண்டு வெளியான மாரி திரைப்படத்தின் தொடர்ச்சியாக 2018 -ல் வெளியான திரைப்படம் மாரி 2. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிக்கொடி நாட்டியது. தமிழில் வெளியான இந்த திரைப்படம் அப்படியே ஹந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிட்டப்பட்டது. யூடியூப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தை இதுவரை 15 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. அதில் சுமார் 13 லட்சம் பேர் மாரி படத்தை லைக் செய்துள்ளனர்.

ALSO READ | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி?

இதேபோல் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் வெளியாகி தேசிய விருது வென்ற ’அசுரன்’ திரைப்படத்துக்கும் இந்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. யூடியூப்பில் இருக்கும் இந்த திரைப்படம் இதுவரை 5 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளையும், சுமார் 7 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி நான்காவது முறையாக இணைந்த திரைப்படம் அசுரன். 

இந்தப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்தார். அவருக்கு தமிழில் இது முதல் திரைப்படம் ஆகும். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட இந்த படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பெரும் பாராட்டு கிடைத்தது. ஏற்கனவே பாலிவுட் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் இருந்து ஹிந்தியில் டப் செய்யப்பட்ட அவரின் படங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்போது தனுஷ் மாறன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். மேலும், அடுத்ததாக இரண்டு ஹிந்தி படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

ALSO READ | Remake Movie: லேட்டஸ்ட் தென்னிந்தியத் திரைப்படங்களின் பாலிவுட் ரீமேக்! மாஸ்டர் முதல் கைதி வரை...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News