The Kerala Story Ott: தி கேரளா ஸ்டோரி.. ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகிறது

The Kerala Story OTT Release Date: சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி உட்பட பலர் நடித்த திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. தற்போது இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 7, 2024, 09:15 AM IST
  • சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா நடித்த திரைப்படம் தி கேரளா.
  • தி கேரளா ஸ்டோரி கடந்த ஆண்டு மே 5ந் தேதி திரையரங்கில் வெளியானது.
  • ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
The Kerala Story Ott: தி கேரளா ஸ்டோரி.. ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகிறது title=

தி கேரளா ஸ்டோரி ஓடிடி ரிலீஸ் தேதி: விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிதப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் "தி கேரளா ஸ்டோரி". இந்தியில் உருவான இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படத்தின் டீசர் வெளியான முதலே மக்களிடையே பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி மத வெறுப்பை தூண்டும் வகையில் இந்த திரைப்படம் இருப்பதாக கூறப்பட்டது.

தமிழகத்தில் இந்த திரைப்படத்திற்கு தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன. தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் The Kerala Story திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இருவிதமான வரவேற்பை பெற்றது. மேலும் மேற்கு வங்கத்தில் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது மட்டும் இன்றி, தமிழகத்திலும் மூன்றே நாட்களில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் இருந்து வாஷ் அவுட் ஆனது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே, ஒரு பக்கம் சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், மற்றொருபுறம், பாக்ஸ் ஆபிஸில் வசூலில் வேட்டையாடி வந்தது.

மேலும் படிக்க | Lal Salaam: லால் சலாம் ஒரு அரசியல் பேசும் படம் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இந்நிலையில் தற்போது திரைப்படம் வெளியாகி ஓர் ஆண்டு காலம் முடிவடைந்துள்ள நிலையில் இப்போது தி கேரளா ஸ்டோரியின் (தி கேரளா ஸ்டோரி ஓடிடி ரிலீஸ் தேதி) ரசிகர்கள் நீண்ட காலமாக அதன் OTT வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள்.

தி கேரளா ஸ்டோரி OTT வெளியீட்டு தேதி:
தி கேரளா ஸ்டோரி (The Kerala Story OTT Release Date and Platform) திரைப்படமானது கேரள மாநிலத்தில் இருந்து காணாமல் போன 32 பெண்களை மையமாகக் கொண்டது மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சுதிப்தோ சென் அந்த பெண்கள் எங்கிருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்குவதற்கு தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறார். அதா ஷர்மா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பாத்திமா பா கேரக்டரில் நடித்துள்ளார். பாத்திமா பா ஒரு இந்து மலையாளி செவிலியர் ஆவார், அவர் தனது வீட்டிலிருந்து கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை திரைப்படத்தின் கதை ஆகும். 

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற பிப்ரவரி 16 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் (OTT Release Date) வெளியாக உள்ளதால் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | Thalapathy Vijay Salary: கடைசி படத்திற்கு தளபதி விஜய் வாங்கப்போகும் சம்பளம் இவ்வளவு கோடிகளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News