Adah Sharma: ‘நல்லா சர்கஸ் பண்ற மேன் நீ..’ புடவையில் Back Flip செய்த கேரளா ஸ்டோரி பட நாயகி..!

Adah Sharma Back Flip Video: தி கேரளா ஸ்டோரி படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த நடிகை அடா சர்மா, கடற்கரையில் புடவை கட்டிக்கொண்டு பேக் ஃப்ளிப் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அந்த வீடியோவிற்கு பல நகைச்சுவையான கமெண்டுகளையும் பதிவிட்டுள்ளனர். 

Written by - Yuvashree | Last Updated : May 29, 2023, 10:19 AM IST
  • பெரும் சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி பட நாயகி அடா சர்மா.
  • சமீப காலங்களில் மிகவும் பிரபலம்.
  • அடா சர்மாவின் பேக்ஃப்ளிப் வீடியோ வைரல்.
Adah Sharma: ‘நல்லா சர்கஸ் பண்ற மேன் நீ..’ புடவையில் Back Flip செய்த கேரளா ஸ்டோரி பட நாயகி..! title=

இந்த மாதத்தின் தொடகத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படம், தி கேரளா ஸ்டோரி. சுதிப்தோ சென் இயக்கியிருந்த இந்த படம், இஸ்லாமியர்களை குறி வைத்து தாக்குவதாக கூறப்பட்டிருந்தது. போராட்டங்கள் வலுபெற்ற நிலையில், இந்த படத்திற்கு சில மாநிலங்களில் உள்ள நகரங்களில் தடை விதிக்கப்பட்டது. இறுப்பினும், இப்படம் தற்போது வரை 200கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

தி கேரளா ஸ்டாேரி:

கேரள மாநிலத்தை சேர்ந்த பல ஆயிரம் பெண்கள் வலுக்கட்டாயமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போல தி கேரளா ஸ்டோரி படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்து. இதற்கு இந்தியா முழுவதும் பல தரப்பு மக்களிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, இப்படத்தின் நாயகி அடா சர்மா மற்றும் இயக்குநர் சுதிப்தோ சென் ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் இந்த நடிகை சிறிய சாலை விபத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவும் போராட்டக்காரர்களின் சதியாக இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் அடா சர்மாவின் செல்போன் எண்ணை முகம் தெரியாத ஒரு நபர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். இப்படி அடா சர்மா குறித்த ஏதாவது ஒரு செய்தி தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில்தான் இன்றும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | Sharwanand: ஒரு வாரத்தில் திருமணம்..கார் விபத்தில் சிக்கிய நடிகர்..நிலைமை என்னாச்சு?

புடவையில் பேக்ஃப்ளிப்..!

நடிகை அடா சர்மா, பிங்க நிற புடவையில் கடற்கரையில் நின்று கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. அதில், சில நொடிகளுக்கு அமைதியாக நிற்கும் அடா சர்மா, அடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் செயலை செய்துள்ளார். கடற்கரை மனலில் அலையுடன் சேர்ந்தபடி அடா சர்மா பேக் ஃப்ளிப் அடிக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதற்கு எக்கச்சக்க லைக்ஸ்களை குவித்துள்ளனர். 

“நல்லா சர்கஸ் பண்ற மேன் நீ..”

நடிகை அடா சர்மாவின் பேக்ஃப்ளிப் வீடியோ வைரலானதை தொடர்ந்து, பல பாலிவுட் ரசிகர்க்ள அந்த வீடியோவிற்கு கமெண்ட் அடித்த வண்ணம் உள்ளனர். ஒரு சில தமிழ் ரசிகர்கள், “நல்லா சர்கஸ் பண்ற மேன் நீ..” என்ற வடிவேலுவின் டைலாக்கை பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர், “புடவை கட்டிக்கொண்டு நடப்பதே கஷ்டம் இதில் இவர் எப்படி இதெல்லாம் செய்கிறார்” என ஆச்சரியப்பட்டுள்ளனர். இயற்கை விருமபியான அடா சர்மா சமய்ங்களில் செடி கொடிகளுக்கு இடையே போட்டோ எடுப்பது, கம்பு சுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார். 

மேற்கு வங்காளத்தில் நல்ல வரவேற்பு..

நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்திற்கு பிறகு, தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மேற்கு வங்காளத்தில் சில நாட்களுக்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு, அங்கே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அடா சர்மா, அங்குள்ள ரசிகர்களை சந்தித்து படம் குறித்த கருத்துகளை கேட்டறிந்தார்.

கமல் ஹாசன் எதிர்ப்பு..

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத், நடிகர் வித்யுத் ஜாம்வால், நடிகை குஷ்பு போன்ற பலர் ஆதரவு தெரிவித்தாலும் இதற்கு எதிர்ப்பு வலுவான நிலையில்தான் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல அரசியல் பிரமுகர்கள் இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். அப்படி எதிர்ப்பு  தெரிவித்த பிரலங்களின் லிஸ்டில் கமலும் இணைந்துள்ளார். அபுதாபியில் நடைப்பெற்ற IFFA Awards 2023 நிகழ்ச்சியில் கமலிற்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. நடிகராக மட்டுமன்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக விளங்கும் கமல், இந்த படத்திற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக IFFA விழாவின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். மேலும், உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட கதை என்று கூறும் அளவிற்கு இந்த படத்தில் உண்மைகள் இடம் பெறவில்லை எனவும் அவர் கூறினார். 

மேலும் படிக்க | 23 வயது கவர்ச்சி நடிகையுடன் காதல்..? வதந்தியை உறுதிப்படுத்திய அஜித்தின் மச்சான் ரிச்சர்ட்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News