சூர்யாவின் 2டி நிறுவன பெயரை பயன்படுத்தி பணமோசடி செய்த கும்பல்!

நடிகர் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி பட நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சில பேர் பணம் பரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2021, 08:50 PM IST
  • 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சூர்யாவின் 2டி நிறுவனம் 12க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது
  • சமீபத்தில் தனது அடுத்த நான்கு படங்களும் ஓடிடியில் வெளியாகப் போகிறது என்று வெளியிட்டு 2டி நிறுவனம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
சூர்யாவின் 2டி நிறுவன பெயரை பயன்படுத்தி பணமோசடி செய்த கும்பல்!  title=

2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சூர்யாவின் 2டி நிறுவனம் 12க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது.  மேலும் மூன்று படங்களை வெளியிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பிற்கு பின் சூர்யாவின் 2டி நிறுவனம் எடுத்த படங்கள் ஓடிடியில் வெளியானது.  சூர்யாவின் நடிப்பில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அதற்கு முன் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. 

சமீபத்தில் தனது அடுத்த நான்கு படங்களும் ஓடிடியில் வெளியாகப் போகிறது என்று வெளியிட்டு 2டி நிறுவனம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.   வாணி போஜன், ரம்யா பாண்டியன் நடித்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம், ஜோதிகா மற்றும் சசிகுமார் நடித்த உடன்பிறப்பே, சூர்யா நடிக்கும் ஜெய் பீம், அருண் விஜய் மற்றும் அவரது மகன் நடிக்கும் ஓ மை டாக் போன்ற திரைப்படங்கள் செப்டம்பர்,அக்டோபர், நவம்பர், டிசம்பர் என அடுத்தடுத்த மாதங்களில் வெளியாக உள்ளது. 

2d

இந்நிலையில் 2டி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் போலியான ஈமெயில் முகவரியை உருவாக்கி பொதுமக்களிடம் பணம் பறிப்பதாக புகார் வந்துள்ளது.  சினிமா யூனியனில் அடையாள அட்டை  வாங்கி தருவதாக கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த 2டி நிறுவனம் பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

" போலியான இணைய முகவரியை உருவாக்கி எங்களது பெயரை பயன்படுத்தி சிலர் மக்களை ஏமாற்றி வந்ததை நாங்கள் அறிந்தோம்.  எங்களது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி ஆடிசன் மற்றும் யூனியன் கார்டு வாங்கித் தருவதாக ஏமாற்றி வருகின்றனர்.  2டி நிறுவனத்தின் சார்பாக எந்த ஒரு ஆடிசன்களும் நேரடியாக நடத்தப்படுவதில்லை.  எங்கள் நிறுவனத்தில் படம் பண்ணும் இயக்குனர்கள் நேரடியாக ஆடிசன்கள் வைப்பார்கள் மற்றும் ஆடிசன்களுக்காக எந்தக் கம்பெனியும் பணம் கேட்காது.  எங்களது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்துவதற்காக காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்.  மேலும் இதுபோல் போலியான நபர்களிடம் பணம் மற்றும் உங்களைப் பற்றிய தகவல்களை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று 2d நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

 

சில தினங்களுக்கு முன் ஆர்யா வைப் போல் நடித்து ஏமாற்றி 70 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe

Trending News