சம்பளம் வாங்காமல் நடிக்கப்போகும் தளபதி விஜய்?

ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் நடிகர் விஜய் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 13, 2022, 08:26 AM IST
  • ஷாருக்கான் படத்தில் கேமியோ ரோலில் விஜய்.
  • செப்டம்பரில் சென்னையில் படப்பிடிப்பு.
  • இந்த படத்தில் விஜய் சம்பளம் வாங்காமல் நடிக்கிறார்.
சம்பளம் வாங்காமல் நடிக்கப்போகும் தளபதி விஜய்? title=

நடிகர் விஜய்யை வைத்து அடுக்கடுக்காக சில வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ தற்போது ஹிந்தி திரையுலகின் பிரபலமான ஷாருக்கானை வைத்து 'ஜவான்' என்கிற படத்தை இயக்குகிறார்.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.  போஸ்டரில் ஷாருக்கான் முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றப்பட்டு காட்சியளித்தார்.  இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.

மேலும் படிக்க | லோகேஷின் அதிர்ஷ்ட தேதியில் வெளியாகும் தளபதி 67 படத்தின் அறிவிப்பு!

ஏற்கனவே இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் மற்றும் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானது.  இந்நிலையில் இப்படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது, அதன்படி இப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், இதற்காக சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் செய்திகள் கூறுகிறது.   தனது நண்பர்களான அட்லீ மற்றும் ஷாரூக்கானுக்காக இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.  'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதத்தில் சென்னையில் கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளதாம், இங்கு நடைபெறும் படப்பிடிப்பில் தான் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக விஜய் ஒரு நாள் கால்ஷீட் ஒதுக்கி இருக்கிறாராம்.  இதேபோல நடிகர் சூர்யா சில படங்களில் சம்பளம் வாங்காமல் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  விக்ரம், ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் போன்ற படங்களில் சூர்யா கேமியோ கதாபாத்திரத்தில் நடித்ததற்கு எவ்வித சம்பளமும் வாங்கவில்லை, இந்நிலையில் நடிகர் விஜய்யும் சம்பளம் வாங்காமல் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.  இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | விக்ரம் வெற்றியால் உயரும் கமலின் சம்பளம் - கொடுக்குமா லைகா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News