Thalapathy 68: விஜய் - வெங்கட்பிரபு இணையும் தளபதி 68 படத்தில் வில்லன் இவரா?

Thalapathy 68: 'தளபதி 68' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை வில்லனாக நடிக்கவைக்க இயக்குனர் வெங்கட் பிரபு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : May 22, 2023, 11:45 AM IST
  • விஜய்யின் வெற்றி படங்களில் ஒன்றான 'குஷி' படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்தார்.
  • விஜய்யுடன் நண்பன், மெர்சல் மற்றும் வாரிசு ஆகிய படங்களில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார்.
  • 'தளபதி 68' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.
Thalapathy 68: விஜய் - வெங்கட்பிரபு இணையும் தளபதி 68 படத்தில் வில்லன் இவரா? title=

Thalapathy 68: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'லியோ' படத்திற்கு பிறகு விஜய் நடிக்கப்போகும் 'தளபதி 68' படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வெங்கட் பிரபு இயக்கப்போவதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வந்தது.  ஆனால் இதுகுறித்து எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்து வந்த நிலையில் தற்போது இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அஜித்துக்கு 'மங்காத்தா' போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபு, விஜய்க்கும் அதேபோன்று ஒரு பிளாக்பஸ்டர் படத்தை கொடுப்பர் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.  கடந்த சில மாதங்களாகவே 'தளபதி 68' படத்தை இயக்கப்போகும் இயக்குனர்களின் பட்டியலில் அட்லீ, கோபிசந்த் மலினேனி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் சர்ப்ரைஸாக வெளியான வீடியோ மூலம் 'தளபதி 68' படத்தை இயக்குவது வெங்கட் பிரபு தான் என்பது உறுதியாகியுள்ளது.  ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அர்ச்சனா கல்பாதி தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவிக்கும் விதமாக வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | வாரிசு ரிலீஸ்க்கு முன் விஜய் வாங்கிய சத்தியம்... வெங்கட் பிரபு வெளியிட்ட தகவல்!

'தளபதி 68' படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இணைவாரா? மாட்டாரா? என்கிற குழப்பம் ரசிகர்களுக்கு இருந்து வந்து நிலையில், தற்போது அதுவும் தெளிவாகியுள்ளது.  அந்த வீடியோவில் படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்புக்குழு ஆகியவற்றின் பெயர்கள் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.  ஒரு puzzle போன்று வடிவமைக்கப்பட்டு அதில் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது, வெங்கட் பிரபு மற்றும் விஜய்யின் முதல் எழுத்தை குறிக்கும் வகையில் அந்த பேனாவில் 'vv' என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  இந்த வீடியோ படம் குறித்த பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளது, மேலும் படம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் வீடியோ அமைந்து இருக்கிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.  

'தளபதி 68' படம் குறித்த எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்கையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் படம் பற்றிய லேடட்ட்ஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.  'தளபதி 68' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை வில்லனாக நடிக்கவைக்க இயக்குனர் வெங்கட் பிரபு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்ததற்கு கிடைத்த வரவேற்பை விட வில்லனாக நடித்ததற்கு கிடைத்த வரவேற்பே அதிகம்.  எஸ்.ஜே.சூர்யா விஜய்யோடு இணைவது இது முதல் தடவையல்ல, இதற்கு முன்னர் விஜய்யை வைத்து குஷி என்னும் வெற்றி படத்தை இயக்கியுள்ளர்.  அடுத்ததாக நண்பன், மெர்சல் மற்றும் வாரிசு போன்ற விஜய்யின் படங்களில் நடித்திருக்கிறார்.  மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க பிரபல நடிகர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார், இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.  மேலும் எஸ்.ஜே.சூர்யா மார்க் ஆண்டனி, கேம் சேஞ்சர் மற்றும் ஜிகர்தண்டா போன்ற படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | Thalapathy 68: லியோவை விட உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தளபதி 68... வெங்கட் பிரபு, யுவன் காம்போவில் விஜய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News