"தல 59" : படத்தில் யார் யார் ? படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

Last Updated : Jan 28, 2019, 02:59 PM IST
"தல 59" : படத்தில் யார் யார் ? படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!! title=

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

`விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’  படத்தின் ரீமேக் தான் இந்தப் படம்.  இந்தப் படத்துக்கான பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தற்போது தல 59 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளார். இது அவருடைய முதல் தமிழ்ப்படம் ஆகும். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களை தவிர இந்த படத்தில் ரங்கராஜ் பாண்டே ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கோகுல் சந்திரன் படத்தொகுப்பையும், திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளையும், கே.கதிர் கலை பணிகளையும், பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பையும் கவனிக்கிறார்கள்.

Trending News