Karthigai Deepam: எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க? தீபா திரும்ப வருவது பிடிக்கலையா?

Karthigai Deepam Today Episode: இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2024, 04:28 PM IST
Karthigai Deepam: எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க? தீபா திரும்ப வருவது பிடிக்கலையா?  title=

Tamil Serial Karthigai Deepam Latest Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா உருவத்தில் இருக்கும் கீதா கார்த்திக் கார் மீது வந்து விழ அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கீதா எஸ்கேப் ஆன நிலையில் போலீஸ் அவளை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று கிளம்புகின்றனர். மறுபக்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் அபிராமி கண் விழிக்க குடும்பம் மொத்தமும் அவளை பார்க்க உள்ளே வருகிறது.

கண் விழித்த அபிராமி கார்த்திக் தீபா கல்யாணம் முடிந்ததா என்று கேட்க அருணாச்சலம் உண்மையை சொல்ல வர டாக்டர் தடுத்து நிறுத்தி விடுகிறார், இந்த சமயத்தில் கார்த்திக் மீனாட்சிக்கு போன் போட்டு தீபா கிடைத்து விட்டதாகவும் சிறு காயங்கள் இருப்பதால் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்கிறான்.

அடுத்து பிளாஸ்கட்டில் கீதா பணக்கார வீட்டு பெண், பெரிய பிசினஸ் மேன் என்பது தெரிய வருகிறது. கார்த்திக் அவளை தான் தீபாவாக நடிக்க அழைத்து வருகிறான் என்பது தெரிய வருகிறது. இதை தொடர்ந்து மீனாட்சி ஐஸ்வர்யாவிடம் வந்து எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க? தீபா திரும்ப வருவது பிடிக்கலையா என்று கேட்க ஐஸ்வர்யா ஷாக்காகி சமாளிக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு!! எத்தனை கோடி வரும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News