தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் படம் வெளியான 3 நாட்களுக்கு ஆன்லைனில் யாரும் விமர்சனம் செய்ய கூடாது என்றும், 3 நாட்களுக்கு பிறகு விமர்சனம் செய்து கொள்ளலாம் என்றும், இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விமர்சனங்களுக்கு தடை விதித்தால் கருத்து சுதந்திரத்தில் தலையிடுவது போல் இருக்கும் என்று இந்த மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் பலரும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சனம் செய்து வந்தனர். பணம் கொடுத்து படம் பார்ப்பவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்ய தான் செய்வார்கள் என்றும், நல்ல படங்களை யாரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள் என்றும் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்தனர்.
மேலும் படிக்க | 2024ன் டாப் இசையமைப்பாளர் யார்? ஏ.ஆர்.ரஹ்மான்-அனிருத் இல்லை! ‘இவர்’ தான்!
இந்நிலையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில், செயல் தலைவர் T.G. தியாகராஜன் மற்றும் பொதுச் செயலாளர் T. சிவா ஆகியோர் விமர்சனங்களை தடை செய்வது பற்றி சங்கத்தின் விளக்கத்தை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரைப்படங்களின் விமர்சனங்களை பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட திரைப்படம் வெளியான மூன்று நாட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற, நீதிமன்றத்தில் நமது சங்கத்தின் கோரிக்கை, சமீப காலங்களில் சில ஊடகங்கள் தனிப்பட்ட வன்மத்துடன், சில திரைப்படங்களுக்கு எதிராக விமர்சனம் செய்து வருவதையும், தனி மனித தாக்குதல் செய்து வருவதையும் தடுக்கவே தவிர, ஒட்டுமொத்தமாக அனைத்து ஊடங்கங்களுக்கும் எதிரானது அல்ல.
For the attention of all media . Please go through@onlynikil @TGThyagarajan @TSivaAmma pic.twitter.com/lKlQf2CMOi
— Tamil Film Active Producers Association (@tfapatn) December 6, 2024
அப்படிப்பட்ட சிலரை மட்டுமே தடுக்க முடியாத காரணத்தினால் தான், ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை கேட்டு நீதிமன்றம் சென்று இருக்கிறோம். இதே காரணத்திற்காகத்தான், ஏற்கனவே மலையாள திரைப்பட உலகமும் நீதிமன்றம் சென்றுள்ளது. பாரம்பரியமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அவர்களின் இணையதளங்களில் எப்போதும் திரைப்படங்களை, திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களை தரம் தாழ்த்தி விமர்சிப்பது இல்லை. சில ஊடகங்கள்/ஊடகவியலாளர்கள் தவிர, மீதம் அனைத்து ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் திரைப்பட உலகிற்கு ஆதரவாக இருக்கிறார்கள், பல திரைப்படங்களின் வெற்றிகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் பல முறை திரைப்பட நிகழ்வுகளில் சொல்லி இருக்கிறோம்.
மீண்டும் இங்கு சொல்ல விரும்புகிறோம். நமது சங்கத்தின் இந்த முயற்சி அனைத்து ஊடங்களுக்கும் எதிரானது அல்ல. ஒட்டுமொத்தமாக அனைவரையும் புறக்கணிப்பது நமது சங்கத்தின் நோக்கம் இல்லை. அதே போல, அப்படிப்பட்ட நடுநிலையான ஊடங்கங்களின் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் எதிரானது அல்ல நமது சங்கத்தின் இந்த செயல்பாடு. எனவே வழக்கு மன்றத்தில் இது குறித்து ஒரு சரியான வழிமுறை (Guidelines) வரும் வரை, தயாரிப்பாளர்கள் அந்த திரைப்படத்திற்கான PRO-வுக்கு பரிந்துரைக்கும், டெலிவிஷன், பத்திரிக்கை, யூ-டியூப் (YouTube) சேனல்கள், வலைத்தளங்கள், சோசியல் மீடியா Influencer-கள், Press Show-வுக்கு வந்து, திரைப்படங்களை பார்த்து விமர்சனங்களை வெளியிடுவதில், எந்த எதிர்ப்பும் நமது சங்கத்தில் இருந்து இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
எனவே திரைப்பட தயாரிப்பாளரின் அனுமதியோடு Press Show-வுக்கு மேலே குறிப்பிட்டவர்கள் வந்து திரைப்படங்களை பார்த்து விமர்சனம் செய்யலாம். விரைவில் சட்டரீதியாக, நீதிமன்றத்தில் இதற்கு ஒரு தீர்வும் எட்டப்படும் என்று நம்புகிறோம். தயாரிப்பாளர்களின் நலன் காக்கவே நமது சங்கம் இந்த முயற்சியை எடுத்துள்ளது. எனவே, இந்த விளக்கத்தையும், செயல்முறையையும், தயாரிப்பாளர்கள் சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | அல்லு அர்ஜூனுக்கு இன்னொரு தேசிய விருதா? புஷ்பா 2 படத்தின் விமர்சனம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ