Tamil Cinema Celebrities Who Donated For Wayanad Landslide : வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டு, தற்போதுவரை 333 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். இதையடுத்து, இந்தியாவின் அரசியல் கட்சி தலைவர்களில் இருந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரை பலர் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் வெள்ள நிவாரண நிதிக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் நிவாரண நிதியை கொடுத்திருக்கின்றனர். அவர்களில் யார் யார் எவ்வளவு நிதி கொடுத்திருக்கின்றனர் என்பதை இங்கு பார்ப்போம்.
தமிழ் திரை பிரபலங்கள் உதவி!!
இயற்கை பேரிடர்களின் போது பிரபலங்கள் பலர் உதவிக்கரம் நீட்டுவது வழக்கம். அப்படி, இந்த வயநாடு மண்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணத்தொகையை அளிக்க கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கு உதவி கேட்டு அந்த அரசு வங்கி எண்களையும், QR Scanஐயும் வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து, அதற்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொது மக்கள் மட்டுமன்றி, திரை பிரபலங்களும் உதவியிருக்கின்றனர்.
விக்ரம்:
தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர் விக்ரம். இயல்பாகவும் அனைவருக்கும் உதவி செய்யும் மனம் படைத்தவர். இவர், கேரள மண் சரிவு பேரிடருக்கு 20 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்திருக்கிறார். இந்த தொகையை அவர் 2 நாட்களுக்கு முன்னர் வழங்கினார்.
சூர்யா-ஜோதிகா:
கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சினிமா ஜோடியாக வலம் வருபவர்கள் சூர்யா-ஜோதிகா. இவர்கள் இருவரும் தற்போது மும்பைக்கு குடி பெயர்ந்து விட்டனர். ஏற்கனவே நடிகர் சூர்யா அறம் எனும் தொண்டு நிறுவனத்தை தனது குடும்பத்துடன் சேர்ந்து நடத்தி வருகிறார். ஜோதிகாவும் அதற்கு உறுதினையாக இருக்கிறார். இந்த நிலையில், அவர்கள் இருவரும் சேர்ந்து ரூ.50 லட்சத்தை நன்கொடையாக அளித்திருக்கன்றனர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன்:
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர், நயன்தாரா. கேரளாவில் இருந்து தமிழ் படங்களில் நடிக்க வந்த இவர், தற்போது கோலிவுட்டின் டாப் நடிகையாக விளங்குகிறார். இவரும், விக்னேஷ் சிவனும் இணைந்து மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கேரள அரசுக்கு ரூ.20 லட்சத்தை நன்கொடையாக அளித்திருக்கின்றனர்.
மம்மூட்டி-துல்கர் சல்மான்:
மலையாள நடிகர் மம்மூட்டியும் அவரது மகன் துல்கர் சல்மானும் சேர்ந்து சுமார் 235 லட்சத்தை நன்கொடையாக கொடுத்திருக்கின்றனர். இதன் பிறகு இன்னும் தேவை பட்டாலும் தாங்கள் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேலும், இன்னும் பலர் உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஃபகத் ஃபாசில்:
மலையாளம் மற்றும் தமிழில் அசுர நடிகராக வலம் வருபவர் ஃபகத் ஃபாசில். இவரும் இவரது நண்பர்களும் இணைந்து சுமார் 25 லட்சத்தை கேரள அரசுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர்.
வயநாடு மண்சரிவு பேரழிவு, உலகை திரும்ப வைத்த சம்பவமாக மாறியிருக்கிறது. வயநாட்டில் இருந்த மலை கிராமங்களும், அதில் இருந்த மக்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நிமிடத்திற்கு நிமிடம் தோண்ட தோண்ட பலி எண்ணிக்கை அதிகரிப்பதும், காணாமல் போயிருப்பவர்களின் எண்ணிக்கை பலியானவர்களின் பெயர் பட்டயலில் சேர்வதும் காண்போரை பதைபதைக்க வைக்கிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் அந்த பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ