சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். அந்தப் படம் மாபெரும் வெற்றியடைய அடுத்ததாக் அஜித்துடன் வில்லன் படத்தில் இணைந்தார். அந்தப் படமும் ஹிட்டாக வின்னர் படத்தில் ஹிட்டானார்.
வின்னர் படமும் மெகா ஹிட்டானது. தொடர்ந்து கமலுடன் ஜோடி சேர்ந்து அன்பே சிவம் படத்தில் நடித்தார். இதனால் கோலிவுட்டில் கிரண் பெரிய ரவுண்ட் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அதற்கு பிறகு வந்த படங்கள் தோல்வியை சந்திக்க இருக்கும் இடம் தெரியாமல் போனார் கிரண். அதன் பிறகு ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
இதனையடுத்து, ஆம்பள', 'முத்தின கத்திரிக்கா', 'சகுனி' போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்தார். ஆனால் பட வாய்ப்புகள் அடுத்தடுத்து அவருக்கு கிடைக்கவில்லை.
இருப்பினும் அசராத கிரண் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவ்வாக இருப்பார். மேலும் தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி பகிர்வதும் அதனை ரசிகர்கள் அதிகம் லைக் செய்வதும் வழக்கமாக இருந்தது.
இந்நிலையில் தன் பெயரில் செயலி ஒன்றை ஆரம்பித்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் கிரண். அந்த செயலி மூலம் தன்னுடன் உரையாடுவதற்கும் பழகுவதற்கும், டின்னர் சாப்பிடுவதற்கும், தன்னுடைய புகைப்படங்களை பெறுவதற்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளார்.
அதன்படி, கிரணை நேரடியாக சந்தித்து பேசி சில மணி நேரம் பொழுது கழித்து டின்னர் சாப்பிடுவதற்கு 1,50,000 ரூபாய் கட்டணமாகவும், அவருடைய கவர்ச்சி புகைப்படங்களை பெறுவதற்கு 2000 ரூபாய் கட்டணமாகவும், அவருடன் வீடியோ காலில் அரை மணிநேரம் பேசுவதற்கு 30,000 ரூபாய் கட்டணமாகவும், 15 நிமிடங்கள் பேச 13,000 ரூபாய் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கமல் எனக்கும்தான் கிஃப்ட் கொடுத்தார் - விஜய் சேதுபதி விளக்கம்
அதுமட்டுமின்றி இந்த செயலியை பயன்படுத்துவதற்கே 49 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது கிரணின் இந்த செயலிதான் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. அதேசமயம் இதுபோன்ற செயலிகளை தடை செய்ய வேண்டுமென்றும் ஒரு தரப்பினர் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR