நடிகை அசினிற்கு விவாகரத்து? சமூக வலைதள பக்கத்தில் அவரே தெரிவித்த தகவல்..!

Asin Divorse Rumours: பிரபல நடிகை அசின், விரைவில் விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 28, 2023, 04:10 PM IST
  • தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், அசின்.
  • 2016ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
  • இவருக்கு விவாகரத்து என செய்தி பரவி வருகிறது.
நடிகை அசினிற்கு விவாகரத்து? சமூக வலைதள பக்கத்தில் அவரே தெரிவித்த தகவல்..! title=

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், அசின். இவர் தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருந்த காலங்களில் இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி” படம்தான் இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது. 

சினிமாவில் இருந்து விலகல்..

கேரளாவை சேர்ந்த அசின், முதலில் மலையாள படங்கிளில் நடித்து வந்தார். பின்பு மெல்ல தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார். தமிழில் இவர் நடிப்பில் வெளியாகியிருந்த கஜினி திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து அதன் இந்தி ரீ-மேக்கிலும் நடித்தார். இதன் மூலம் பாலிவுட்டில் நடிக்கவும் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. கிட்டத்தட்ட 10-12 ஆண்டுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக ஆதிக்கம் செலுத்தினார். இவருக்கு 2016ஆம் ஆண்டு மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் சர்மாவுடன் திருமணம் நடைப்பெற்றது. இதன் பிறகு அவர் படங்களில் நடிப்பதில் இருந்து ஒட்டு மொத்தமாக விலகிவிட்டார். 

மேலும் படிக்க | 'ஆண்டிப்பட்டி கனவா காத்து' பாடல் 100 மில்லியன் வியூஸ்... பாடகர் செந்தில் தாஸ் நெகிழ்ச்சி!

விவாகரத்து?

நடிகை அசின் தனது கணவரிடம் இருந்து பிரிய உள்ளதாகவும் அவர் விவாகரத்து கோரியுள்ளதாகவும் ஒரு பிரபல ஊடகம் செய்தியை வெளியிட்டிருந்தது. இது பெரிய செய்தியாக உருவாக, இதற்கான காரணம் புரியாமல் பலரும் விழி பிதுங்கினர். அசின், தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து தன் கணவருடன் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் நிக்கியுள்ளதுதான் இந்த வதந்திக்கு காரணமாக கூறப்பட்டது. அசின், முதலில் தன் கணவருடன் எடுத்த புகைப்படங்களையும் திருமணத்தின் போது எடுத்திருந்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்பாேது அவை அனைத்தையும் அவர் நீக்கியுள்ளதால்தான் இது போன்ற ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது. 

அசின் விளக்கம்..

வைரலாக பரவி வரும் தனது விவாகரத்து செய்தி குறித்து அசின் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவை பின்வருமாறு:“நாங்கள் கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறோம். இப்போது கூட இருவரும் எதிரெதிரில்தான் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். அப்போதுதான் எனக்கு விவாகரத்து ஆகப்போகிறது என்ற செய்தியை நான் பார்த்தேன். இதே போல எங்கள் திருமணத்தின் போதும் நாங்கள் பிரிந்து விட்டதாக செய்திகள் வந்தன. இதைத்தவிர வேறு வேலை எதுவும் இருந்தால் அதை பாருங்கள். இந்த பதிவை வெளியிடுவதற்காக நான் செலவிட்ட 5 நிமிடங்களை கூட வீண் என கருதுகிறேன்” என்று அசின் குறிப்பிட்டுள்ளார். 

குடும்பத்தில் கவனம் செலுத்தும் அசின்..

நடிகை அசின், சினிமாவை விட்டு விலகிய பிறகு ஒட்டுமொத்தமாக தனது குடும்பத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பல நடிகைகள் வந்தாலும், அசின் இல்லாத இடத்தை யாரும் நிரப்ப முடியாத என தமிழ் ரசிகர்கள் சிலர் அவ்வப்போது ஆதங்கப்படுவது உண்டு. அசினிடம், “நீங்கள் கம்-பேக் கொடுப்பது எப்போது?” போன்ற கேள்விகளையும் அவர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால், அசின் இனி சினிமாவிற்கு மீண்டும் வரும் ஐடியாவிலேயே இல்லை என கூறியுள்ளார். 

அசின் நடித்த படங்கள்..

அசின் அனைத்து திரையுலகையும் விட தமிழ் திரையுலகில்தான் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வந்தார். உள்ளம் கேட்குமே, சிவகாசி, போக்கிரி போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். விஜய்யுடன் நல்ல நட்பு பாராட்டும் நடிகைகளுள் ஒருவர், அசின். இவர்களது பழைய நேர்காணல்கள் இன்றளவும் பலருக்கு பிடித்த வீடியோக்களாக உள்ளன. தமிழில் கடைசியாக இவர் நடித்த படம் கூட விஜய்யுடன் நடித்த ‘காவலன்’ திரைப்படம்தான். 

மேலும் படிக்க | சூர்யா படத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வசனம்..வருத்தம் தெரிவித்த உதயநிதி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News