'படம் எடுக்கும்போதே தெரியும்... அது ஓடாதுனு' - விஜய் படம் குறித்து பிரபல நடிகை பளீச்!

Tamanna About Sura Movie: இனி அப்படி நடிக்கவே மாட்டேன் என்றும், படம் எடுக்கும்போதே அது சரியாக ஓடாது என தனக்கு தெரிந்தது எனவும் சுறா படம் குறித்து நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 1, 2023, 09:15 AM IST
  • தமன்னா தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார்.
  • விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.
  • தமன்னா 2005ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானார்.
'படம் எடுக்கும்போதே தெரியும்... அது ஓடாதுனு' - விஜய் படம் குறித்து பிரபல நடிகை பளீச்! title=

Tamanna About Sura Movie: 2005ஆம் ஆண்டில் 7ஜி ரெயின்போ காலனி புகழ் ஸ்ரீகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'கேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், நடிகை தமன்னா. தொடர்ந்து, வியாபாரியில் பரிட்சயமான முகமாக மாறினாலும் கல்லூரி திரைப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் வேறொரு பரிணாமத்தை கொடுத்தது. 

தமிழ் சினிமாவில் இவர் உச்சத்தில் இருந்த காலம் என்றால் 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளை சொல்லலாம். 'நேற்று இன்று நாளை' என்ற ரவி கிருஷ்ணாவுடன் மீண்டும் 2009இல் இணைந்தார். அதன்பின், படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை என படங்கள் வரிசைக்கட்டின. பின்னர், சற்று இடைவெளிக்கு பின் 2013இல் அஜித்துடன் வீரம் படத்தில் நடித்தார். 

அதன்பின் பாகுபலியில் தான் தமிழ் ரசிகர்கள் அவரை பார்க்க முடிந்தது. பாகுபலிக்கு பின்னரும் கூட தமன்னாவுக்கு தமிழில் மார்க்கெட் பெரிதாக இருக்கவில்லை எனலாம். பாகுபலிக்கு பிறகு வாசுவும் சரணவனும் ஒண்ணா குடிச்சவங்க, தோழா, தர்மதுரை, தேவி, கத்தி சண்டை, AAA, ஸ்கெட்ச், கண்ணே கலைமானே, தேவி 2, பெட்ரமாக்ஸ், ஆக்சன் என பல படங்களில் நடித்தாலும் தோழா, தர்மதுரை, தேவி என சில படங்களே வெற்றியும் பெற்றது. 

மேலும் படிக்க | 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2வா? வாவ்.. செம அப்டேட்!

இதையடுத்து, ஹிந்தி, தெலுங்கில் அவர் பிஸியாக இருந்தாலும் தமிழில் தலைக்காட்டுவது குறைந்துவிட்டது எனலாம். தற்போது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா நடிக்கும் நிலையில் தமிழில் மீண்டும் அவரது பெயர் அடிபட தொடங்கியுள்ளது. சமீப காலமாக கிளாமரில் எல்லை மீறி வரும் தமன்னா, தான் நடித்த 'Lust Stories 2' வெப்-சீரிஸில் திரை வாழ்க்கையில் முதல்முறையாக முத்தக் காட்சியிலும் நடித்திருந்தார். மேலும், அந்த முத்தக் காட்சியில் அவருடன் நடித்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தான் டேட்டிங் செய்வதாக தமன்னா சமீபத்தில் பொதுவெளியில் அறிவித்திருந்தார். 

இப்படி தொடர்ந்து, மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த தமன்னா, ஜெயிலர் படத்தின் காவாலா படத்தில் நடனமாடியதற்கு பின் வைரல் மெட்டீரியலாகவே மாறிவிட்டார். அனிருத் இசையமைத்த அந்த பாடல் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், தமன்னாவின் அசத்தலான நடனம் அனைத்து வயதினரையும் கவர்ந்தது எனலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதற்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வருகின்றனர். சில நாள்களுக்கு முன்னரும் கூட, ஜெயிலர் படத்தின் தமன்னாவின் சக நடிகையாக இருந்த ரம்யா கிருஷ்ணனும் காவாலா பாடலுக்கு நடனமாடிய வீடியோ அதிகம் பரப்பப்பட்டது. 

தற்போது, ஜெயிலர் பிரமோஷன் வேலைகளில் இருக்கும் தமன்னா சமீபத்தில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் தற்போதைய சினிமா வாழ்க்கை முதல், அவரின் சினிமா பயணம் என அனைத்து குறித்தும் மனம் திறந்தார். அதில், தாங்கள் நடித்த படங்களில் மிகவும் சுமாராக நடித்த படம் எது என்றும் அதை திரும்ப பார்க்கவே கூடாது என நினைக்கும் படம் எது என கேள்வியெழுப்பட்டது. 

அதற்கு அவர்,"பல படங்கள் உள்ளன. ஆனால், ஒரு படத்தை சொல்லலாம். அந்த படம் பிடிக்கும் என்றாலும் சில காட்சிகளை நான் நன்றாக நடிக்கவில்லை என நினைப்பேன். பாட்டு எல்லாம் நன்றாக இருக்கும், மிகவும் பிரபலமான படமும் கூட. அதில், ஒன்று சுறா திரைப்படம். அதில் சில காட்சிகளை இனி எப்போதுமே நடிக்க மாட்டேன்" என்றார். தொடர்ந்து, இதுகுறித்து சுறா படத்தை எடுக்கும்போது என்ன எதிர்பார்த்தீர்கள் என்ற கேள்விக்கு,"படம் எடுக்கும்போதே அது சரியாக ஓடாது எனக்கு தெரிந்தது" என்றார். அவரின் அந்த நேர்காணல் வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். 

மேலும் படிக்க | சாதி வெறியனாக மாறிய பகத் பாசில்? திணறும் ட்விட்டர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News