நடிகர் சூர்யாவின் மகள் தியா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்!

சூர்யா - ஜோதிகா தம்பதியரின் மகள் தியா நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 23, 2022, 09:53 AM IST
  • சூர்யா, ஜோதிகாவிற்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உண்டு.
  • தியா சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார்.
  • தேர்வில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
நடிகர் சூர்யாவின் மகள் தியா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்!  title=

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து இருவீட்டார்கள் சம்மதத்துடன் கடந்த 2006ம் ஆண்டு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்.  இந்த நட்சத்திர தம்பதியினருக்கு 15 வயதில் தியா என்கிற பெண் குழந்தையும், 12 வயதில் தேவ் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது.  தியா சென்னையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார், தற்போது நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தியா பெற்றுள்ள மதிப்பெண்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

jothika

மேலும் படிக்க | விஜய்யிடம் ஆர்.ஜே. பாலாஜி சொன்ன கதை தெரியுமா?

பொதுவாக தியா படிப்பில் ஆர்வம் உள்ளவர், தற்போது இவர் தமிழ் பாடத்தில் 95 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 99 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் 95 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்.  இதைவிட சிறப்பு என்னவென்றால் பலரும் கடினமானது என கருதும் கணித பாடத்தில் இவர் 100 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.  இவ்வளவு மதிப்பெண்களை  குவித்துள்ளதை எண்ணி குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் உள்ளதோடு, இந்த சந்தோஷத்தை கொண்டாடி வருகின்றனர்.  நடிகர் சூர்யா அகரம் தொண்டு நிறுவனம் வாயிலாக ஏழ்மையில் இருக்கும் பல குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்கி வருகிறார், மருத்துவம், பொறியியல், வக்கீல் என குழந்தைகள் விரும்பும் பல படிப்புகளையும் படிக்க வைத்து வருகிறார்.

jothika

இந்நிலையில் அவரது மகள் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.  தற்போது சூர்யா விக்ரம் படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' படத்தில் பணியாற்றி வருகிறார்.  அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா, சுதா கொங்கரா, வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆர்.ரவிக்குமார் ஆகியோரது படங்களில் நடிக்கவிருக்கிறார்.

மேலும் படிக்க | தாலியோடு போஸ் கொடுக்கும் நயன்... ரசிக்கும் விக்கி! என்னா லவ்வு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News