Suriya 40 first look: படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்

சூர்யா 40 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 19, 2021, 01:50 PM IST
Suriya 40 first look: படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட் title=

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஓவரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. 

இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த (Suriya 40) படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு (Suriya) ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இவர் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ALSO READ | சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்?

முன்னதாக கையில் நீண்ட வாளுடன் சூர்யா, திரும்பி நடந்து செல்வது போன்ற படத்தின் போஸ்டர் ஒன்று அண்மையில்வெளியாகி வைரலானது. 

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் உற்சாகத்தில் இருக்கின்றனர் சூர்யா ரசிகர்கள். பாண்டிராஜ் திரைப்படத்தை முடித்தவுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

 

 

வாடிவாசல் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்தப்படத்தின் டைட்டில் லுக் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | சூர்யா வா இது? இணையத்தில் வைரலாகும் மாஸ் ஓ மாஸ் புகைப்படம்!

Trending News