சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் உலகளவிலும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ள ரஜினியின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சக்திகளில் அவரது மனைவி லதா ரஜினிகாந்துக்கு ஒரு மிகப்பெரிய இடம் உள்ளது.
கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் ஒரு ஜோடியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் (Latha Rajinikanth) 1981 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி 26 அன்று திருமணம் செய்து கொண்டனர். நேற்று இவர்கள் தங்கள் 40 வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடினர்.
இந்த அருமையான சந்தர்ப்பத்தில், ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் (Dhanush) மனைவியுமான ஐஸ்வர்யா ஆர் தனுஷ், அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மனதைக் கவரும் குறிப்பு ஒன்றையும் எழுதியுள்ளனர்.
ALSO READ: நடிகர் பவர் ஸ்டார் சினிவாசன் மருத்துவமனையில் அனுமதி!
ரஜினியின் (Rajinikanth) மகள் ஐஸ்வர்யா தனுஷ், "அவள் அவர்களை குடும்பமாக ஏற்றுக்கொண்டார். அவரும் அவளது சொந்தங்களை தன் குடும்பத்தைப் போல பார்த்துக்கொண்டார். என்னுடைய இரண்டு தாத்தாக்களும் பாட்டிகளும் காக்கும் கடவுள்களாக இருந்து உங்களைப் பார்த்துக் கொள்கிறார்கள் என நான் நம்புகிறேன். உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுள்ளேன், இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். திருமணம் என்பது மற்றவர்களது சுமைகளை சேர்த்து சுமப்பது. இரக்கம் உணர்ச்சிக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. நட்பு தோழமையின் தளமாகிறது. வீடு எப்போதுமே அன்பான வீடாக இருக்கிறது. நான் உன்னை மட்டும் நேசிக்கவில்லை, உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன், நாம் உருவாக்கிய குடும்பத்தை நேசிக்கிறேன். வாழ்க்கை என்னும் விடுகதைக்கு விடைகளைத் தேடிக்கொண்டு நாம் முதிர்வடைகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு ஒரு பொருளை கற்பிக்கிறோம். நான் இப்போது ஒரு இடைவெளியை விடப்போகிறேன்” என்று எழுதியுள்ளார்.
"என் அன்பான அப்பா அம்மாவுக்கு சூப்பர் டூப்பர் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்! கொள்ளை அன்புடன்!! #happyanniversary” என ஐஸ்வர்யா தனுஷ் மேலும் எழுதியுள்ளார்.
ALSO READ: நயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்துவிடுவார்கள் - பிரபல நடிகர் பகீர்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR