தமிழ் சரித்திர படத்தில் சன்னி லியோனா?

தமிழ் சரித்திரப் படத்தில் நடிக்க நடிகை சன்னி லியோனுக்கு சண்டை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

Last Updated : Dec 4, 2017, 11:51 AM IST
தமிழ் சரித்திர படத்தில் சன்னி லியோனா? title=

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் தமிழ் சரித்திர திரைப்படத்தில் பிரபல நடிகையான சன்னி லியோன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இந்த படம் அதிகமான பொருட்செலவில் எடுக்கபடுகிறது. 

இதையடுத்து, சரித்திரப் படமான இதில் சன்னி லியோனுக்கு சண்டை பயிற்சியும் கற்றுக்கொடுத்து வருகின்றனர். இப்படத்திற்காக 150-நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, சன்னி லியோன் கூறுகையில்; இந்த படத்திற்கு பின் என் அடையாளம் நிச்சயம் மாறும் என்றும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

Trending News