'ஒன் 2 ஒன்' -க்கு தயாரான சுந்தர் சி - சுடசுட வெளியான அப்டேட்

நடிகர் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் ’ஒன் 2 ஒன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 14, 2022, 03:59 PM IST
'ஒன் 2 ஒன்' -க்கு தயாரான சுந்தர் சி - சுடசுட வெளியான அப்டேட் title=

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இருக்கும் சுந்தர் சி, அடுத்ததாக புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளார். அந்தப் படத்தை இயக்குநர் திருஞானம் இயக்க உள்ளார். திரிஷா நடிப்பில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘பரமபதம்’ திரைப்படத்தை இயக்கிய அவர், தனது 2வது படத்தில் சுந்தர் சி-யுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்துக்கு ’ஒன் 2 ஒன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ALSO READ | ’எதற்கும் துணிந்தவன்’ டீமில் இணைந்த சிவகார்த்திகேயன்

 24 HRS புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ‘ஒன் 2 ஒன்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு பொங்கலன்று பூஜையுடன் தொடங்கியது. சுந்தர் சி உள்ளிட்ட படத்தில் நடிக்கும் நடிகர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கிறார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். வில்லன் கதாப்பாத்திரத்துக்கு தற்போது தமிழ் திரையுலகில் படு பிஸியாக இருக்கும் முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அவருடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தவுடன், அவரது பெயரையும் அதிகராப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

ALSO READ | மாஸ் காட்டும் சூர்யா..! 5 மொழிகளில் வெளியாகும் ’எதற்கும் துணிந்தவன்’

படத்தின் மற்ற டெக்னீஷியன்களைப் பொறுத்தவரை விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இதனிடையே, சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் தலைநகரம் படத்தின் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு படு மாஸாக இருக்கிறார் சுந்தர் சி. படத்தின் போஸ்டரே, தலைநகரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News