பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு! புகைப்படம் உள்ளே!

சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது, இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது!  

Last Updated : Jun 27, 2018, 01:44 PM IST
பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு! புகைப்படம் உள்ளே! title=

நடிகர் சிவகார்திகேயன், ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் மூலம் கிடைத்த மக்களின் ஆதரவால் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 

இந்நிலையில், இன்று ரஜினி, விஜய்க்கு பிறகு அதிக குடும்ப ரசிகர்களை கொண்டு முன்னணி ஹீரோவாக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். இவர், படங்கள் என்றாலே விரும்பி போகும் நிலைக்கு அவர் வளர்ந்துவிட்டார், சமீபத்தில் ஒரு முன்னணி பத்திரிகை ஒன்றில் பேட்டியளித்தார்.

இதையடுத்து, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகும் கோலமாவு கோகிலா திரைப்படம். இப்படத்தின் இரண்டவாது பாடலான "கல்யாண வயசு" எனும் பாடலினை எழுதியது இவர் தான் என்று இணணயத்தில் வைரலாகி வருகின்றது. இதையடுத்து, இவர் அண்மையில் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  

இந்நிலையில், இவர் தற்போது இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாறுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில் அதன் புகை படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது..

Trending News