சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ கலெக்ஷன் நிலவரம்: மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார், மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், யோகி பாபு, சுனில், மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். அத்துடன் இந்த படத்தில் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும் இந்தப் படம் தமிழில் மாவீரன் என்ற பெயரிலும் தெலுங்கில் மஹாவீரடு என்ற பெயரிலும் வெளியாது.
மாவீரன் படத்தின் மேலோட்ட கதை
பத்திரிகை ஒன்றில் கார்டூன் வரைபவராக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இதில் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சத்யா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சத்யா தனது தாய் மற்றும் தங்கையுடன் குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். தைரியமில்லாத சத்தியா எந்த ஒரு பிரச்சனைக்கும் செல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் குப்பத்தில் இருக்கும் மக்களை அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவர்களை வேறு பகுதியில் உள்ள அரசாங்கம் கட்டிக் கொடுக்கும் வீட்டிற்கு மாற்றுகின்றனர். அங்கு சென்றவுடன் தான் தெரிய வருகிறது வீட்டை தரமில்லாமல் கட்டி உள்ளார்கள் என்று. இந்த சமயத்தில் சத்யாவிற்கு மட்டும் ஒரு குரல் கேட்கிறது, அதன் மூலம் இந்த கட்டிடம் இடியப்போகிறது என்று தெரிய வருகிறது. அந்த குரலின் மூலம் சூப்பர் ஹீரோவாக அங்கிருந்த மக்களை காப்பாற்றுகிறார் என்பது தான் மாவீரன் படத்தின் கதை.
மேலும் படிக்க | சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் படித்த மாணவர் செய்த சாதனை..!
மாவீரன் படம் எப்படி உள்ளது?
மாவீரன் படத்தை பார்த்த பல ரசிகர்கள் படம் முழுக்க சிரிப்பு வெடிகளாக உள்ளதாகவும் கொடுத்த காசுக்கு நல்ல படத்தை பார்த்த உணர்வு இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். மேலும், படத்தின் முதல் பாதி போனதே தெரியவில்லை என்றும் இரண்டாம் பாதி மிகவும் நீளமாக இருந்ததாகவும் படம் விமர்சித்துள்ளனர்.
மாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்
35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான மாவீரன் திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 6 முதல் 8 கோடி ரூபாய் வரை மாவீரன் படம் வசூல் செய்திருக்கும் என்றும் வெளிநாடுகளில் 1 முதல் 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இரண்டாம் நாளில் மேலும் 10 கோடியும் வசூலித்திருந்தது மாவீரன்.
மாவீரன் படத்தின் மூன்றாம் நாள் வசூல் நிலவரம்
இந்த நிலையில் வார இறுதிநாளான நேற்று அதாவது மூன்றாம் நாள் 12 முதல் 14 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியுள்ளது. இதன்மூலம் முதல் மூன்று நாட்களில் மாவீரன் வசூல் 35 கோடி ரூபாயை எட்டிவிட்டடதாக சொல்லப்படுகிறது. இது அபிஸியல் அப்டேட் இல்லையென்பதால், இதனை விடவும் அதிகம் வசூலித்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் உலகம் முழுவதும் 35 முதல் 40 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவீரன் ஓடிடி எப்போ
இதனிடையே மாவீரன் ஓடிடி வெளியீடு பற்றி பேசுகையில், வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கோடிகளில் புரளும் சிவகார்த்திகேயன்...’மாவீரன்’ படக்குழுவின் சம்பள விவரம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ