ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ருதிஹாசன்? அவரே வெளியிட்ட பதிவு!

Shruti Haasan Secret Marriage: நடிகை ஸ்ருதிஹாசன், ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல்கள் பரவியது. 

Written by - Yuvashree | Last Updated : Dec 27, 2023, 10:14 AM IST
  • ஸ்ருதிஹாசன் சாந்தனு என்பவரை டேட்டிங் செய்து வருகிறார்.
  • இவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது.
  • இது குறித்து ஸ்ருதிஹாசன் விளக்கம் தெரிவித்துள்ளார்.
ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ருதிஹாசன்? அவரே வெளியிட்ட பதிவு! title=

நடிகையும், கமல்ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதிஹாசன், ரசகிசயமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவியதையடுத்து அதற்கு விளக்கம் தெரிவித்து அவரே ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். 

ஸ்ருதிஹாசன்:

தமிழ் திரையுலகின் செல்லப்பிள்ளையாக உள்ள ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் மூத்த மகள், ஸ்ருதிஹாசன். இவரது தாய் சரிகா, சில தமிழ் படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு அக்ஷரா ஹாசன் என்ற தங்கையும் உள்ளார். தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியான ‘ஹேராம்’ படத்தில் ஸ்ருதி, குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார். 2009 முதல் 2011ஆம் ஆண்டு வரை தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வந்த இவர், தமிழ் ரசிகர்களுக்கு  2011ஆம் ஆண்டு அறிமுகமானார். ‘ஏழாம் அறிவு’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து 3, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட சில கமர்ஷியல் படங்களில் நடித்திருந்தார். இவற்றில் நடித்து காெண்டிருந்த போதே சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வந்தார். இவருக்கு தெலுங்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வரும் நிலையில், தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘சலார்: பார்ட் 1 சீஸ் ஃபயர்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

லண்டனில் செட்டிலான ஸ்ருதி..

ஸ்ருதி ஹாசனுக்கு நடிப்பை விட, இசை மீது ஆர்வம் அதிகம். இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் செட்டிலாகி விட்டார். இவர், சாந்தனு ஹசாரிக்கா என்பவரை பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகிறார். ஸ்ருதி, சமீபத்தில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது மட்டுமன்றி, இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அடிக்கடி தனது காதலர் சாந்தனுவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 

மேலும் படிக்க | காதலியுடன் டூர் சென்றுள்ள நடிகர் விஷால்? வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில், பாலிவுட்டின் பிரபலங்களின் நட்பு வட்டாரங்களில் ஒருவராக இருக்கும் ஓர்ஹான் என்பவர் ஸ்ருதிஹாசன் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், ஸ்ருதிஹாசன் ஓரமுறை போட்டோ எடுக்கும் போது தன்னிடம் கோபமாக நடந்து கொண்டதாகவும், ஆனால் அவரது கணவர் சாந்தனுவுடன் தான் நல்ல நட்பு கொண்டிருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, ஸ்ருதிஹாசன் தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவியது. 

ஸ்ருதிஹாசன் விளக்கம்..

ஸ்ருதிஹாசனின் ரகசிய திருமணம் குறித்து தகவல்கள் பரவியதையடுத்து, அவரே அதற்கு விளக்கமளித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. நான் எனது வாழ்க்கை குறித்து வெளிப்படையாக இருக்கும் போது, இதை மட்டும் ஏன் மறைக்க வேண்டும்? என்ன பற்றி தெரியாதவர்கள் தயவு செய்து அமைதியாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

திருமணம் குறித்து பேசிய ஸ்ருதிஹாசன்..

ஸ்ருதி, இந்த திருமண வதந்திகள் பரவுவதற்கு முன்னர் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில், தனக்கு ‘திருமணம்’ என்ற வார்த்தையை கேட்டாலே பயமாக இருப்பதாக கூறியிருந்தார். மேலும், தனக்கு தனது காதலருடன் இருக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவருடன் இணைந்து வேலை செய்வது நல்ல பொழுதுபோக்காக இருப்பதாகவும், “இது திருமணத்தை விட சிறந்தது இல்லையா?” என்றும் கூறியிருந்தார். ஸ்ருதிஹாசனின் திருமண வதந்திதான் தற்போது திரையுலகின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. 

மேலும் படிக்க | இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல்! வைரலாகும் புகைப்படம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News