நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் இன்று உயிரிழந்தார்.

Vanitha Bijayakumar Ex Husband Dies: வனிதாவின் மூன்றாவது கணவர் சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பீட்டர் பால் உயிரிழந்தார்.

Written by - Bhuvaneshwari P S | Edited by - Shiva Murugesan | Last Updated : Apr 29, 2023, 11:59 AM IST
நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் இன்று உயிரிழந்தார்.  title=

Tamil Cinema Updates: தமிழில் சந்திரலேகா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகுமார். இவர் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள். வனிதாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ளார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் கலக்கி வருகிறார். யூடியூப் சேனல்களில் பேட்டி எடுப்பது, சமையல் வீடியோ போடுவது என பிஸியாக இருந்து வருகிறார். இவர் யூடியூப் சேனலும் வைத்துள்ளார். இந்த சூழலில் கொரோனா லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். வனிதாவின் மூன்றாவது திருமணம் மிகப்பெரிய சர்ச்சையானது.

விவாகரத்து செய்யாமலே திருமணம்:
பீட்டர் பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே வனிதாவை திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பால் மனைவி மீடியாக்களுக்கு வனிதாவை விளாசி பேட்டி அளித்தார். சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் விவாதமானது. அதன்பிறகு சில மாதங்களிலேயே வனிதா கருத்து வேறுபாடு காரணமாக பீட்டர் பாலை பிரிந்தார். அவருக்கு அதிகப்படியான குடிப்பழக்கம் இருப்பதாகவும் வனிதா கூறி இருந்தார்.

மேலும் படிக்க: 'லியோ' படத்தில் தளபதி விஜய்யுடன் நடிக்கும் ரியல் சிங்கம்! வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

பீட்டர் பால் உயிரிழப்பு:
இந்நிலையில் பீட்டர் பால் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார். இதை அறிந்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: அழகில் வரைந்த ஓவியமா திரிஷா? பொன்னியின் செல்வன் 2-க்குப் பிறகு ரசிகர்களின் ரியாக்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News